இந்த வார பலன்கள் 08.09.16. முதல் 15.09.16. வரை
விட்டுக்கொடுத்து போவது அவசியம். பிடிவாதத்தை தவிர்க்கவும். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்படும் காரியங்களில் சிறப்பான வெற்றி காண்பீர்கள். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆதாயம் தரும். உறவினர்கள் இல்ல விசே~ங்களில் உங்கள் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்படும்போது பொருளாதார ரீதியாக இழப்புகளை சந்திக்க நேர்ந்தாலும், பெயரும், புகழும் கூடும். தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நல்ல விஷயங்களுக்காக செலவு செய்வீர்கள். பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம், சிக்கனம்
தேவை. மாணவர்கள், சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவர். விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலை சூட்டி வழிபடுவது நல்லது.
வாழ்க்கை தரம் உயரும். முன்னேற்ற பாதைக்கான சரியான வழியில் பயணிப்பீர்கள். உங்கள் தனித்திறமைகள் வெளிப்படும் வகையில் வாய்ப்புகள் வரலாம். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகள் நடைபெற துவங்கும். புதிய வண்டி, வாகனங்கள் வாங்க நினைப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். அவசரத்தால் இழப்புகளை சந்திக்க நேரிடும். உடல்நிலை சீராக இருக்கும். கலைத்துறையினர் கூடுதலாக செலவழிக்க நேரிடும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு, ஞாபகத்திறன் வளர்ந்து கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடுவது மகிழ்ச்சி தரும்.
அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரித்து சேமிப்பு கூடும். கணவன், மனைவி குடும்ப ஒற்றுமையை பேணிக்காப்பர். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சுபகாரிய நிகழ்ச்சிக்கு செலவு செய்ய நேரலாம். பணியாளர்கள், சுறுசுறுப்பாக பணி இலக்கை நிறைவேற்றி நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பெண்கள், ஆன்மிக சுற்றுலா சென்று வருவர். மாணவர்கள், படிப்புடன் கலைகளும் பயில்வர். சொந்தத்தொழில் செய்பவர்கள், தொழில் நுணுக்கங்களை அறிந்த நபரை உதவிக்காக வைத்துக் கொள்ளலாம். பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம்
கிடைக்காது. வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு நெய் தீபமிட்டு வழிபட்டால் பகை விலகும்.
பரம்பரை சொத்திலிருந்து பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும். சொந்தத்தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கொடுக்க முடியாத சிரமம் ஏற்படலாம். கூட்டுத் தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பாதிப்பு நேரும். பங்குச்சந்தையில் பரபரப்பு இருந்தாலும் வியாபாரத்தில் வேறுபட்ட நிலை இருக்கலாம். பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும். மாணவர்கள், படிப்பில் சிறப்பிடம் பெறுவர். செவ்வாய்க்கிழமை முருகருக்கு நெய் தீபமிட்டு வழிபட்டால் வினைகள் அகலும்.
உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோ~ம் அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிதாக வாகனம் வாங்குவீர்கள். பணவரவு, வங்கி சேமிப்பு அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை வசூலிப்பதில் சிரமங்கள் வரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நண்பர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். சொந்தத் தொழில் புரிபவர்கள் செய்யும் வேலையில் உதவியாளரின் ஒத்துழைப்புக் கிடைப்பதில் சிக்கல் நேரலாம். பணியாளர்களுக்கு, நிர்வாகத்துடன் சிறு பிரச்சனை வந்து நீங்கும். பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். மாணவர்கள், ஆர்வமுடன் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவர். வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டால் வளம் பெருகும்.
வீண் செலவுகளைத் தவிர்க்கவும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோ~மும், அமைதியும் இருக்கும். வீடு, நிலம் வாங்கும் முயற்சிகள் தீவிரமடையும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புத்தி கூர்மை அதிகரிக்கும். மனதில் சந்தோ~ம், மனதைரியம் அதிகரிக்கும். இலாபம் படிப்படியாக அதிகரிக்கும். பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்களுக்கு, ஆடை, ஆபரணம் சேரும். மாணவர்கள், ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். தினசரிகளில் வரும் அன்றாட நிலவரங்களை கவனிப்பது நன்மை தரும். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடுவது நல்லது.
எல்லா செயல்களும் வெற்றியடையும், பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு தொல்லை ஏற்பட்டாலும், பெண்களால் அவைகள் சமாளிக்கப்பட்டு விடும். உறவினர் இல்லத்து நிகழ்ச்சியில் மனைவி, மக்களுடன் கலந்து மகிழ்வடைவீர்கள். ஆன்மீகப் பயணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு உண்டாகலாம். வேளையில் இருப்பவர்கள் பணியில் கவனமாக இருப்பது அவசியம். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் உறவினர்கள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால் துன்பம் அகலும்.
அரசு வேலை முயற்ச்சிப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராமல் முக்கிய விருந்தினர் வந்து சேரக்கூடும். இல்லத்தில் சுபகாரிய செலவுகளை ஏற்க வேண்டி இருக்கும். பெண்களின் சேமிப்பு நல்ல விதத்தில் செலவழியும். உடல் பலம் அதிகரிக்கும். மனைவியால் அதிர்~;டம் அதிகரிக்கும். உடலில் மந்தத் தன்மை அதிகரிக்கும் தொழிலில் மாற்றம் உண்டாகும். அம்மாவின் ஆசீர்வாதம் கிடைக்கும். பணியாளர்கள், புதிய தொழில்நுட்பங்களைக் கற்று சலுகை பெறுவர். பெண்கள், சுபநிகழ்ச்சியில் பங்கேற்பர். மாணவர்கள், சிறப்பாக படிப்பர். பங்குச்சந்தையில் சுமாரான லாபம் கிடைக்கும். அதிகமான முதலீடுகளைத் தற்போது செய்யாமல் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு வியாழனன்று வில்வ மாலை சூட்டி வழிபடுவது நன்மை தரும்.
எதிர்பார்த்த காரியங்கள் நடைபெற்று மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். பரம்பரை தொழிலில் மேன்மை உண்டாகும். சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். அனைத்து வியாபார முயற்சிகளும் வெற்றியடையும். ஆலயங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்ய நேரலாம். ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும். பணியாளர்கள், பணிச்சுமைக்கு ஆளானாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. பெண்கள் பணம், நகை விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். மாணவர்கள், படிப்பில் உரிய தேர்ச்சி காண்பர். செவ்வாய் அன்று முருகனுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டால் நல்ல பலனளிக்கும்.
அப்பாவிடம் சச்சரவு செய்ய வேண்டாம். குடும்பத்தில் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளில் மனைவி, குழந்தைகளை மகிழ்விக்க வேண்டி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உடல் ரீதியான சிறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். எண்ணியது எல்லாம் எளிதில் நடைபெறும். திருக்கோயில் வழிபாட்டுக்கு பிரயாணம் செல்வீர்கள். மனைவி மூலம் செல்வச்சேர்க்கை உண்டாகும் தொழில் லாபம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் சந்தோ~ வாழ்வு நடத்துவர். மாணவர்கள், கல்வியில் மேம்படுவர். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடுவது நல்லது.
தொழில், உத்தியோகம் காரணமாக பிரயாணம் செய்யும் நிலை உண்டாகும். குடும்பத்தில் பெண்களின் நீண்டகால கனவு நிறைவேறும். நிலம் வாங்க மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். எதிர்பாராத அதிர்ஷ்;டம் உண்டாகும். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் தொழில் நிலை சிறப்படையும் வியாபாரம் விருத்தியடையும். மனதில் கடவுள் பக்தி அதிகரிக்கும். எல்லா விசயங்களிலும் கவனம் தேவை. உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற வி~யங்களில் தலையிட வேண்டாம், யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும். புதன்கிழமை பெருமாளுக்கு துளசிமாலை சூட்டி வழிபடுவது மகிழ்ச்சியளிக்கும்.
மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி, பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களைச் சந்தோ~மாக வைத்திருக்க முயற்சிப்பீர்கள். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். முக்கிய செயல் எளிதாக நிறைவேறும். அதிரஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம். வங்கிக் கணக்கில் சேமிப்பு உயரும். இ~;டதெய்வ அருள் துணை நிற்கும். மனைவியால் குடும்பம் வளர்ச்சி பெறும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி பெறும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெற்று மகிழ்வர். பெண்கள், சுபநிகழ்ச்சிகளில் விருப்பமுடன் பங்கேற்பர். மாணவர்கள், படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவர். திங்கட்கிழமை பார்வதி தேவிக்கு தீபமிட்டு வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.
கணித்தவர்: ஜோதிடரத்னா மிதுன கணேசன்