ரியோடிஜெனிரோ
ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் (மாற்று திறனாளிகள்) விளையாட்டு போட்டியில் இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
இந்த வரலாற்று சாதனையை இந்தியாவுக்கு பெற்று தந்தது, மாரியப்பன் தங்கவேலு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

மற்றொரு உயரம் தாண்டுதல் போட்டியில் வருன்பாட்டி என்பவர் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு சேலம் மாவட்டம் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளி இளைஞர் 20 வயதான மாரியப்பன் தங்கவேலு.
5 வயதில் நடைபெற்ற ஒரு பேருந்து விபத்தில் ஊனமானார். அவரது வலதுகாலில் முட்டுக்கு கீழே அடிபட்டு நிரந்தர ஊனம் ஏற்பட்டது.
இருந்தாலும், விளையாட்டில் ஆர்வம் உள்ள அவர் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மார்ச் மாதம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பாரா ஒலிம்பிக்கில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று தங்கம் பதக்கத்தை கைப்பற்றினார்.
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/09/14318056_199617997123293_845128994_n.mp4[/KGVID]
Patrikai.com official YouTube Channel