R3

 

லிங்குசாமி தயாரித்த, உத்தமவில்லன் தோல்வியால், பல கோடி நட்டம் அவருக்கு. ஈராஸ் நிறுவனத்திடம வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை.  இந்த சிக்கலால், இவரது இன்னொரு தயாரிப்பான ரஜினி முருகன் படத்தை வெளியிட முடியவில்லை.  மார்க்கெட் உள்ள ஹீரோவான சிவகார்த்திகேயன் நடித்திருந்தும், படம் முடங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் வேந்தர் மூவிஸ், தானே ரஜினிமுருகனை வெளியிட ஒப்புக்கொண்டது. ஈராஸூக்கு தரவேண்டிய பணத்தையும் தானே தந்துவிடுவதாக சொன்னது. லிங்குசாமியும், சிவகார்த்திகேயனும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள்.

இப்போது வேந்தர் மூவிஸ், திடுமென பின்வாங்கிவிட்டது. பதறிப்போன லிங்கு, வேந்தர் தரப்பில் காரணம் கேட்டிருக்கிறார். எதிர் தரப்பில் மவுனமே பதிலாக வந்திருக்கிறது.

இதற்கிடையே தடைக்கான காரணத்தைக் கேட்ட லிங்குவுக்கு மயக்கமே வந்துவிட்டதாம்!

அது சரி.. ரஜினி முருகனை இப்படிச் செய்த வில்லன் யாராக இருக்கும் என்கிறீர்களா? உத்தமமான மனிதர் என்று பெயர் எடுத்தவர் அப்படிச் செய்திருப்பாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஏதோ தகவல் பிழையாகவே இருக்கும் என்று தோன்றுகிறது ஆகவேதான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.