பெங்களூரு:
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் கன்னட வெறியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாநில அளவில் பந்த் நடைபெற்று வருகிறது.
இன்றைய முழு அடைப்பு போராட்டத்திற்கு மாநில அரசும் மறைமுக ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள், போக்குவரத்து அரசால் முடக்கப்பட்டுள்ளது. ஐடி கம்பெனிகளையும் மிரட்டி பணிய வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
இன்றைய பந்தின்போது, நடைபெற்று வரும் கன்னட வெறியர்களின் போராட்டம் தமிழக மக்களை கொதிப்படைய செய்துள்ளது. மேலும் இதுபோன்ற அநாநரிகமான செயல்களை கர்நாடக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.