நெட்டிசன்:
நம்பிக்கை ராஜ் (Nambikai Raj ) அவர்களின் முகநூல் பதிவு:
“காமராசர் ஆட்சிக்கு பிறகு யாராவது அணை கட்டினார்களா?” என கேள்வி கேட்கும் ஒருவர்கூட உண்மையை தெரிந்துகொள்ளவில்லை அல்லது தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்றுதான் தெரிகிறது.
நான் ஒன்றும் காமராசர் அணையே கட்டவில்லை என சொல்லவில்லை. காமராசரும் அணைகளை கட்டினார் அவருக்கு முன்பு ஆங்கிலேயர்களும் அணைகளை கட்டினார்கள் , அவருக்கு பிறகும் தமிழகத்தில் நிறைய அணைகள் கட்டப்பட்டன என்றுதான் சொல்கிறேன்.
தமிழகத்தில் பெரிதும், சிறிதுமாக மொத்தம் உள்ள அணைகள் – 86
இதில் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டவை (நீர் தேக்கங்கங்கள்) -3
கல்லணை & வீராணம் ஏரி – சோழர் காலம்
செம்பரம்பாக்கம் ஏரி – பல்லவர் காலம்
ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 6 ( அதில் முக்கியமானவை முல்லை பெரியாறு, மேட்டூர் ஸ்டேன்லி, பாபநாசம், பேச்சிப்பாறை)
காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள் – 10
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 26
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 36
இவை 2013க்கு முன்புவரை உள்ள தகவல்கள் மட்டுமே. 2013க்கு பிறகு உள்ள விபரங்கள் கிடைக்காததால் அதை இதில் சேர்க்க முடியவில்லை.
ஒரு சில அணைகள் ஒரு ஆட்சியில் தொடங்கி இன்னொரு ஆட்சியில் முடிக்கப்பட்டிருக்கும். அதை முடிக்கும் ஆட்சியின் கணக்கில் சேர்த்திருக்கிறேன்.
2015ல் திறக்கப்பட்ட விஸ்வகுடி அணை (பெரம்பலூர் மாவட்டம்) திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி அருகே கட்டப்பட்ட 8 தடுப்பணைகளை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.
கடந்த 50 ஆண்டுகளில் கட்டப்பட்டவை அனைத்தும் நடுத்தர மற்றும் சிறிய அணைகள்தான். ஆனால் அணைகளே கட்டப்படவில்லை என சொல்லப்படும் பொய்களை மறுதலிக்க கீழ்கண்ட விபரங்களை கொடுக்க வேண்டியது அவசியமாகிறது