3-thumb_jayaram274-mhhfkb8lf9763nza29tnj9ru6lbkbcosin9i90kbio

லையாள நடிகர் ஜெயராம், யானைகளின் காதலன். வீட்டிலேயே வீட்டிலேயே யானைகளை வளர்த்து வருகிறார். அவற்றை பராமரிக்க தனியாக பாகனும், கால்நடை மருத்துவரும் இருக்கிறார்கள்.

கேரளாவில் கோவில் விழாக்களில் யானைகள் அணிவகுப்பு சகஜம். அந்த நேரங்களில் சில சமயம் யானைகளுக்கு மதம் பிடித்து ஓடி சிலரை கொன்றும் இருக்கின்றன. ஆகவே கேரள மக்கள், யானை என்றாலே அச்சத்தோடு பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

குடும்பத்துடன் ஜெயராம்..
குடும்பத்துடன் ஜெயராம்..

இதனால் வருத்தமடைந்த ஜெயராம், யானையின் குணாதிசயங்கள், அவற்றை வளர்க்கும் முறை ஆகியவை பற்றி புத்தகம் எழுத முடிவு செய்தார். யானைப்பாகன்கள், கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அலுவலர்கள் என பலரது கருத்துக்களை கேட்டும், தனது அனுபவங்களையும் , ‘ஆட்கூட்டத்தில் ஆனப்பொக்கம்’ என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார்.

இதன் வெளியீட்டு விழா திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. மம்முட்டி வெளியிட… ஜெயராம் வீட்டு யானையின் பாகன் குட்டன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய மம்முட்டி, “இந்த புத்தகத்தில் யானைகள் பற்றி மிக அரிதான தகவல்களை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் ஜெயராம்” என்று பாராட்டினர்.

நன்றி தெரிவித்த ஜெயராம், “திருவனந்தபுரத்தில் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு சென்றேன். அங்கு மம்முட்டி யானைகளுடன் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதிலிருந்தே யானைகள் மீது இனம்புரியாத பாசம் ஏற்பட்டுவிட்டது.

எனக்கு யானைகள் மீது பாசத்தை ஏற்படுத்திய மம்முட்டியே, இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்றார் நெகிழ்வுடன்.

தன் வீட்டு பாகனை, முதல் பிரதி வாங்கச் செய்த ஜெயராமை அனைவரும் பாராட்டினார்கள்.