சென்னை:
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 15வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
மூப்பனாரின் நினைவிடம் தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் உள்ளது. அவது நினைவுநாளையொட்டி, அவரது மகனும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார்.
அதை தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை பாடல்கள் பாடப்பட்டன. நிர்வாகிகள் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், முன்னாள் எம்.பிக்கள், என்.எஸ்.வி சித்தன், ராம்பாபு, ராம சுப்பு, தீர்த்தராமன், மற்றும் வேணு கோபால், சக்திவடிவேல், என்.டி.எஸ் சார்லஸ், விக்டரி மோகன், மாநில இணை செயலாளர் பூந்தமல்லி ஜெயகுமார், ஆர். வெங்கடேஷ், டி.என்.அசோகன், கத்திப் பாரா ஜனார்த்தனன், முனவர் பாட்ஷா, மயிலை சந்திரசேகர், ஆர்.எஸ்.முத்து, தி.நகர் கோதண்டன், சைதை கிருஷ்ணகுமார், ராஜ மகாலிங்கம் டி.ஆர்.செல்வம், ராஜதுரை, செல்வி, மால் மருகன் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மகாகவி பாரதியார் மக்கள் கட்சி தலைவர் மயிலை சத்யா ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மூப்பனார் நினைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சைதை மனோகரன் ஏற்பாட்டில் பெண்களுக்கு இலவச சேலைகள், மற்றும் மழை கோட்டுகள் வழங்கப்பட்டன. இதில், சைதை நாகராஜன், கே.ஆர்.டி ரமேஷ், கோடம்பாக்கம் ராமராஜ், நரேஷ் குமார், கோவில் பாஸ்கர், ஆலந்தூர் பாஸ்கர் மோகன கிருஷ்ணன், பழனி, ஞானசேகரன், கமல், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் ஏற்பாட்டில் சைக்கிள், தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
வடசென்னையில் கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ ஏற்பாட்டில் மாணவ-மாணவர்களுக்கு புத்தகப்பை, நோட்டுகள் வழங்கப்பட்டன.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார், ஏற்பாட்டில் தையல் இயந்திரங்கள், புடவைகள் வழங்கப்பட்டன.
இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா ஏற்பாட்டில் தையல் எந்திரங்கள், இஸ்திரிபெட்டி வழங்கப்பட்டன. இதில் கக்கன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாணவரணி மாநில தலைவர் சுனில் ராஜா ஏற்பாட்டில் மாணவர்களுக்கு சட்டபுத்தகங்கள் வழங்கப்பட்டது.
மாநில பொதுசெயலாளர் பி. ஜவகர் பாபு ஏற்பாட்டில் நலிந்தோருக்கு தையல் மிஷன், 200 பேருக்கு வேட்டி சேலை, பள்ளி மாணவர்களுக்கு ரூ.2000 வீதம் 25 பேருக்கு கல்வி உதவி தொகை, சலவை தொழிளாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, மாணவர்களுக்கு சீருடை ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் என்.ரவிச்சந்திரன், ஆர்.புனிதன், நெடுமாறன், செயற்குழு உறுப்பினர் வி.எம். அரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஏற்பாட்டில் குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் புடவைகள் வழங்கப்பட்டன. அனைத்து அரங்குகளுக்கும் ஜி.கே.வாசன் நேரடியாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது.