கொழும்பு:
லங்கை அதிபரின் இணையதளத்தை 17 வயது இளைஞர் ஒருவர் முடக்கி விட்டார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
hacker
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின் அதிகாரபூர்வ இணையதளத்தை ஹேக் செய்து, “தேர்வைத் தள்ளிவையுங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள்” என்ற கோரிக்கையை(!) தளத்தின் முகப்பில் பதித்த 17 வயது பையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கை அரசின் இணையதளங்கள்அடிக்கடி ஹேக் செய்யப்ப்டுவது சகஜமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் ஒரு 17 வயது பையன் எளிதாக உள்ளே புகுந்து விளையாடியிருப்பது இதுவே முதல் முறை.  இதன் விளைவாக இணையதளம் ஒருவாரகாலமாக முடக்கப்பட்டிருந்தது.
ஒருவழியாக போலீஸ் அந்த குறும்புக்கார இளைஞனை கண்டுபிடித்து சைபர் குற்றத்தடுப்பு பிரிவின்கீழ்  கைது செய்திருக்கிறது. அவனுக்கு இலங்கை மதிப்பில் மூன்று லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இப்போது இணையதளம் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.