புதுடெல்லி
பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 9 பதக்கங்கள் வாங்குவதற்கு மாட்டிறைச்சியே காரணம் என்று பாரதியஜனதாவை சேர்ந்த உதித்ராஜ் கூறியுள்ளார்.

ஜமைக்கா வீரர் உச்சேன் போல்ட் தனது பயிற்சியாளர் ஆலோசனைப்படி தினமும் இரண்டு முறை மாட்டிறைச்சி சாப்பிட்டதே ஒலிம்பிக்கில் அவர் 9 பதக்கங்கள் வெல்லக் காரணம். இக்கருத்தை கருத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருப்பவர் பாஜக தலைவரும், வடமேற்கு டில்லியின் எம்.பியும், முன்னணி தலித் தலைவருமான உதித்ராஜ்.
தனது பேச்சு, சலசலப்பை கிளப்பியதையடுத்து. மாட்டிறைச்சி சாப்பிட நான் பரிந்துரைக்கவில்லை, உசேன் போல்ட்டின் பயிற்சியாளர் கூறியதை மட்டுமே தாம் வெளிப்படுத்தியதாக விளக்கம் அளித்துள்ளார்.
அடிப்படை கட்டமைப்பு இல்லாத ஜமைக்கா போன்ற நாடுகளில் கூட இதுபோன்ற வெற்றியாளார்கள் உருவாக முடியுமென்றால் அவரைப்போல நமது வீரர்களும் வெற்றிக்கான வழிளை ஆராய்ந்து அவற்றை கைக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்திலேயே தாம் அந்த ட்வீட்டை வெளியிட்டதாக கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel