மெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜுனோ எனப்படும் விண்கலத்தை அனுப்பியது.
அதாவது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி புளோரிடாவின் கேப்கான் விண்வெளி தரத்தில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டது. தற்போது அந்த ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கி உள்ளது.
juno_current_position_7_02_2016
கடந்த 5  ஆண்டுகளாக தொடர்ந்து பயணம் செய்து வந்த  ‘ஜுனோ’ விண்கலம் தற்போது வியாழன் கிரகத்தை நெருக்கி பயணத்தை தொடர்ந்து வருகிறது.
தற்போது மேகங்களுக்கு இடையே மணிக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த விண்கலம் கடந்த ஜூலை 4-ந்தேதி வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. தற்போது இக்கிரகத்தின் மேகமூட்டத்தின் மேல் 4200 கி.மீ. தூரத்தில் பயணம் செய்து வருகிறது.
இந்த ‘ஜுனோ’ விண்கலம் வருகிற 2018-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வியாழன் கிரகத்தை அடைந்து தனது பயணத்தை முடிக்கிறது.
இத்தகவலை நாசாவின் ஜுனோ விண்கல முதன்மை தயாரிப்பாளர் ஸ்காட் பால்டன் தெரிவித்துள்ளார்.