தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மீண்டும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இதற்கு முன் சுமார் பத்து ஆண்டுகளாக சங்க பொறுப்பில் இருந்த சரத் – ராதாரவி  அண்ட் கோ, ஒன்றரை கோடி வரை ஊழல் செய்துவிட்டதாக புகார் கூறியது விசால் அண்ட்கோ.
“ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலத்திலேயே  நாசர் விசால் கார்த்தி பொறுப்பில் இருக்கும்போது மூன்று கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கிறது” என்று குற்றம் சாட்டுகிறார் நடிகரும், பத்திரிகையாளருமான வாராகி.

சங்க செயலாளர் விசால், தலைவர் நாசர்
சங்க செயலாளர் விசால், தலைவர் நாசர்

 
தற்போது “சவுக்கு” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர் நம்மிடம் பேசியதில் இருந்து..
“இதற்கு முன்பு நடிகர் சங்க பொறுப்பில் இருந்தவர்கள், சங்க பணத்தை மோசடி செய்துவிட்டார்கள் என்று புகார் கூறியது விசால் அணி. இவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்றுதான் நானும் இவர்களுக்கு வாக்களித்தேன். அதோடு, இவர்களுக்காக நடிகர் சங்க உறுப்பினர்களைத் தேடித்தேடி வாக்கு சேகரித்தேன்.
ஆனால் இவர்களோ, ஒரே வருடத்தில் மூன்று கோடி அளவுக்கு மோசடி செய்திருக்கிறார்கள்” என்ற வாராகி விரிவாக பேச ஆரம்பித்தார்:
“நடிகர் சங்க பொதுக்குழுவில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான தீர்மானம் போட்டார்கள்.  பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடம். ஆனால் இதற்காக டென்டர் விடவில்லை. சங்க செயலாளர் விசாலுக்கு தெரிந்த, ஆந்திர நிறுவனம் ஒன்றுக்கு அந்த காண்டிராக்டை கொடுத்துவிட்டார்கள். இதுவே தவறு.
மேலும் அந்த நிறுவனத்திடமிருந்து பலனும் பெற்றிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக ஐம்பது லட்ச ரூபாய் வந்துவிட்டதாக தெரிகிறது.
அடுத்த விசயம்…  தென்னிந்திய நடிகர் சங்கம் இடத்தில் இரண்டு கல்யாண மண்டபங்கள் கட்டுவதாக தீர்மானித்தார்கள். நல்ல விசயம்தான். ஆனால் அங்கே விழாக்களை வைக்க வேண்டுமென்றால் ஐந்து லட்ச ரூபாய் கட்ட வேண்டுமாம். அதாவது உறுப்பினர்களும் அதே தொகையை செலுத்த வேண்டுமாம்.  தினக்கூலிபோல ஐநூறு, அறு நூறு ரூபாய் சம்பளம் பெறும் நடிகர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களும் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்துத்தான் நடிகர் சங்க மண்டபத்தை பயன்படுத்த வேண்டுமா?
எந்த ஒரு சங்கமும், மண்டபம் கட்டினால் வெளி ஆட்களிடம்தான் கட்டணம் வசூலிப்பார்கள். உறுப்பினர்களிடம், பராமரிப்பு செலவுக்கு மட்டுமே பணம் வாங்குவார்கள்.
பொருளாளர் கார்த்தி
பொருளாளர் கார்த்தி

நடிகர் சங்கத்தில் சுமார், 3200 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 1300 உறுப்பினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களில் வருடத்துக்கு ஐம்பது திருமணம் நடந்தாலே அதிகம். ஆகவே உறுப்பினர்களுக்கு சலுகை கட்டணத்தில் மண்டபம் அளிக்க வேண்டும் என்றேன். ஆனால் விசாலோ, “உறுப்பினராக இருந்தாலும், ஐந்து லட்சம் கட்டியே ஆக வேண்டும்” என்றார்.
அதே போ இ்ன்னாரு விசயம்..
சங்க வளாகத்திலேயே பார், நீச்சல் குளம், ஜிம் ஆகியவையும் கட்டப்போகிறார்கள். அந்த ஜிம்மில் சேர்வதற்கும் உறுப்பினர்கள் ஐந்து லட்ச ரூபாய் கட்ட வேண்டுமாம்.
இதையும் எதிர்த்து குரல் கொடுத்தேன்.
பிறகு,  இருநூறு பேர் அமரும் அளவில் மினி மண்டபம் கட்டப்போகிறேன் என்கிறார் விசால். அதில், உறுப்பினர்களுக்கு சலுகை கட்டணத்தில் விழா நடத்திக்கொள்ளலாமாம்.  இருநூறுபேர்  அமரும் அளவிலான மண்டபம் திருமணத்துக்கு சரி வருமா..
அது மட்டுமல்ல… கார் பார்க்கிங்குக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த மினி மண்டபத்தை, கட்டுகிறார்கள். அது சட்டப்படி தவறு.
முன்னர் இருந்த நிர்வாகிகள் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டார்கள் என்று விசால் குருப் குற்றம் சாட்டியது. இவர்களும் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். தங்களக்கு ஓட்டுப்போடாத 150 பேரை சங்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.
அடுத்து..
கட்டிடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். நல்ல விசயம்தான். ஆனால் அதன் ஒளிபரப்பு உரிமைக்கு டென்டர் கோராமல், சன் டிவிக்கு கொடுத்துவிட்டார்கள். இதற்குக் காரணம், விசாலும் உதயநிதி ஸ்டாலினும் கல்லூரி தோழர்கள். அந்த முறையில் ஏதோ அண்டர்ஸ்டாண்டிங்கில் சன் டிவிக்கு உரிமைய வழங்கிவிட்டார்கள்.
இதற்காக சன் டிவி 13 கோடி ரூபாய் கொடுத்ததாக விசால் அறிவித்தார். அதில் கிரிக்கட் போட்டி நடத்த 3 கோடி ரூபாய் செலவாகிவிட்டதாக தெரிவித்தார். நிச்சயமாக அவ்வளவு செலவு ஆகியிருக்கவே வாய்ப்பில்லை. அதற்கான செலவு கணக்கை உறுப்பினர்கள் பார்வைக்கு விசால் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வைக்கவேண்டும்.
வாராகி
வாராகி

மேலும் சன் டிவி கொடுத்த பணத்தில்தான், இடத்துக்கான டாக்குமெண்ட் செலவு செய்ததாக கூறுகிறார்கள். இப்போது சன் டிவி கொடுத்த 13 கோடியில் 7 கோடிதான் இருக்கிறதாம்.
அதான் சொன்னேன்.. முந்திய சங்க நிர்வாகிகள், பாத்து வருடங்களில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக புகார் கூறினார்கள் இவர்கள். ஆனால் இப்போது ஒரே வருடத்தில் மூன்று கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கிறது.
இதையெல்லாம் கேட்டு கந்ட மார்ச், ஏப்ரல் மாதங்கலில் இரு கடிதங்கள் எழுதினேன். பதிலே இல்லை.  இந்த மாத முதல் வாரத்தில், மீண்டும் கடிதம் எழுதி, 15 நாட்களுக்குள் பதில் வராவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கைக்காக நீதிமன்றத்தை நாடுவேன் என்று குறிப்பிட்டேன். உடனே இன்று (27.08.2016) வரச் சொல்லியிருக்கிறார்கள். நானும் போகிறேன். என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று கூறி நம்மிடமிருந்து விடை பெற்றார் நடிகரும் பத்திரிகையாளருமான வாராகி.
ஆக, நடிகர் சங்கத்தில் அடுத்த பூகம்பம் வெடிக்கப்போகிறது!