பெங்களூர்:
லிம்பிக் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இல்லை என ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
jaisa
ரியோ ஒலிம்பிக் முடிந்துவிட்ட நிலையில் நாடு திரும்பிய இந்திய வீராங்கனைக்கு H1N1 வைரஸ் அதாவது பன்றி காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது.
இந்திய மாரத்தான் வீராங்கனையான OP ஜெய்ஷ்வாவுககு பன்றி காய்ச்சல் இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுதாசிங் என்னும் வீராங்கனைக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததை அடுத்து OP ஜெய்ஷ்வாவுக்கும் அந்த சோதனை நடத்தப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியின் 9ம் நாள் அன்று பெண்களுக்கான மாரத்தான் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் இந்தியா சார்பில் வீராங்கனைகள் ஜெய்சா மற்றும் கவிதா ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஜெய்சா 2 மணி நேரம் 47 நிமிடம் 19 நொடிகளில் இலக்கை(42.195 கி.மீ) எட்டி 89வது இடத்தை பெற்றார். கவிதா ராவத் 2 மணி நேரம் 59 நிமிடம் 29 நொடிகளில் இலக்கை எட்டி 120வது இடத்தை பிடித்தனர். தற்போது இப்போட்டிகளின் போது இந்தியா சார்பில் வீராங்கனைகளுக்கு சரியான நேரத்தில் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என கூறி தலைப்பு செய்திகளில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
33 வயதான் ஜெய்ஷா, கடந்த வாரம் பெங்களூர் வந்தார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இரத்த பரிசோதனைக்கு ஜெய்ஷா உடன்பட மறுத்தார் என இந்தியா விளையாட்டு அதிகாரிகளின் தலைவர் சுந்தர் தெரிவித்தார்.
பெங்களூர் வந்த ஜெய்ஷா மோசமான உடல்நிலை காரணமாக தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு செல்லவில்லை. பரிசோதனக்கு உடன்படாத ஜெய்ஷா,  கடந்த வியாழக்கிழமை ரத்த மாதிரிகளை தர சம்மதித்தார்.
இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நல்ல முடிவுகள் வந்துள்ளன. H1N1 வைரஸ் தாக்கம் எதுவும் இல்லை என முடிவுகள் வந்துள்ளது.