உலகளவில் மிகவும் பிரபலமான உணவு பட்டியலில் பீட்சாவுக்கும் ஒரு இடம் உண்டு. சிங்கார சென்னையிலும் கூட தெருவுக்கு தெரு பீட்சா கடை வந்துவிட்டது. ஒரு போன் செய்தால் போதும் டெலிவரி பாய் மூலம் வீட்டிற்கே வந்து சேர்ந்துவிடும்.
வெளிநாடுகளில், தற்போது ஒரு சில நிறுவனங்களில் டெலிவரி பாய்களுக்கு பதிலாக ட்ரோன் மூலம் பீட்சாக்களை டெலிவரி செய்வது நடைமுறைக்கு வந்துள்ளது.
அது சரி, ட்ரோன்கள் என்றால் என்ன?
ட்ரோன்கள் என்பது ஒருவகையான ரோபோ. ஆளில்லா சிறிய விமானம். உலகமே தீவிர வாதிகளைப் பார்த்துப் பயந்தால், அந்தத் தீவிர வாதிகளைப் பயமுறுத்துவது ரோபோ’. ‘ட்ரோன்’ (Drone) எனப்படும் ஆளில்லா உளவு விமானம்.
இது ஒரு சிறிய இயந்திரம் அல்லது சிறிய வானூர்தி எனவும் சொல்லலாம். அது ஹெலிகாப்டர் போல காற்றில் பறந்து செல்லும்.
நாம் பல ஆங்கில படங்களில் பார்த்திருப்போம். பிரபலமான டெர்மினேட்டர் 3 படத்தில் எதிரிகளை இனம்கண்டு ஆள் இல்லா விமானங்கள் தாக்குதல் நடத்தும். கிட்டத்தட்ட அதே மாதிரி துல்லியமாகத் தாக்குதல் நடத்தி ஆட்களைக் கொல்கிறது இந்த ட்ரோன்!
ஆரம்ப காலத்தில், இந்த ட்ரோன்கள் மூலம், காட்டுத் தீயை அணைக்க, காடுகளை கண்காணிக்க, மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க, பைலட்கள் பயிற்சி எடுக்க, போட்டோ எடுக்க, போன்ற பலவிதமான உளவு வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது பீட்சா டெலிவரிக்கு பயன்படுத்த வருகிறார்கள்.
இது போல் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இதற்காக முயற்சி மேற்கொண்டு உள்ளன. ஏனினும் அதற்கு நியூசிலாந்தில் மட்டுமே ட்ரோன் டெலிவரிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இனி நியூசிலாந்தில் ட்ரோன்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. தற்போது, ட்ரோன் மூலம் பிட்சா டெலிவரி செய்யும் முயற்சியில் ஒரு நிறுவனம் வெற்றியும் கண்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டோமினோஸ் பீட்சா பிரைவேட் லிமிடட் நிறுவனம் ஆக்லாந்து மாகாணத்தில் நடத்திய சோதனை முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளது. இதன் மூலம் உலகில் முதல் ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய போகும் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த வருட இறுதியில் சேவைகள் தொடங்கும் என கூறப்படுகிறது.
இதன் பயனாக, இனி வாடிக்கையாளர்கள், கடைகளுக்கு போன் செய்து பீட்சா ஆர்டர் செய்தால், உங்கள் வீட்டிக்கு பீட்சா வரும். ஆனால் டெலிவரி பாய் மூலமாக அல்ல ட்ரோன் மூலமாக.
உலகிலேயே முதன்முறையாக ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய போவது இவர்கள் தான என்றாலும , இந்த செயல்திட்டத்தை நடை முறைபடுத்த அமேசான், கூFள் போன்ற நிறுவனங்களும் ஆர்வமாக உள்ளனர். தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய பச்சை கொடி காட்டியுள்ளனர்.
கடந்த மாதம் அமெரிக்காவிலும் ஒரு நிறுவனம் சோதனை செய்து வெற்றிபெற்றது. ட்ரோன் டெலிவரிகளில் பல சிக்கல்கள் உள்ளது. எனினும் குறைவான மக்கள்தொக, தெளிவான வான் போக்குவரத்து இது இரண்டும் இருப்பதால் எங்கள் நாட்டுக்கு சுலபம் என்கிறார் நியூசிலாந்து அமைச்சர் சைமன்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ட்ரோன் மூலம் டெலிவரி என்றாலும், அது மின் கம்பிகள், வாகனங்கள், குழந்தைகள போன்ற இடையூறுகளை தாண்டி இலக்கை அடைவது சவாலான விசயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பதை நாம் அன்னாந்து(மேலே ) பார்த்தாலே தெரியும்.