சென்னை:
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக அரசு குழந்தைகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னையை அடுத்த பொன்னேரி கீரப்பாக்கத்தை சேர்ந்த வைஷ்ணவி(10) இன்று சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்தார். இத்துடன் தமிழகத்தில் சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில், பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணன், திருத்தணியைச் சேர்ந்த யுவராஜ் என்ற 4 வயது சிறுவன், சந்தோஷ் (4), மோகன் குமார் (5) மோகன் (9) என ஐந்து பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு கடந்த வாரத்தில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு குறித்து, இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசின் மீது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.