பாரதி சுப்பராயன் (Bharathi Subbarayan) அவர்களின் முகநூல் பதிவு:
சரியாக நாலாயிரத்து முந்நூற்று என்பத்து ஆறு வருடங்களுக்கு முன்னால், வேத வாக்கியர் என்ற முனிவர், மாட்டு மூத்திரமும் சாணமும் கலந்த கலவையை ஒரு டம்ளர் குடித்து விட்டு நிற்காமல் நாற்ப்பத்து ஏழு முறை இந்த உலகை சுற்றி வந்தார். இது யஜூர் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாற்றுச் சான்று.
பசுஞ்சாணமும் பசு மூத்திரமும் கலக்கும் போது ponatric acid மற்றும் hydrogen di oxide என்னும் வாயு உருவாகிறது. இது உள்ளிருந்து நம்மை சுற்றி ஒரு positive energy fieldடை விஞ்ஞான ரீதியாக உருவாக்குகிறது. மேலும் அது ரத்த அனுக்களில் ulrik எனும் இயற்கை ரசாயணத்தைக் கலப்பதால் ஒருவரது திறன் அனைத்து தளங்களிலும் முன்னூறு மடங்கு அதிகரிக்கிறது.

இதை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து உண்மை என்று உணர்ந்த பிறகு வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் மிக ரகசியமாக இதைக் கொடுக்கிறார்கள். அவர்களது ட்ரிங்க்குகள் மட்டும் சீல் செய்திருப்பதற்கு இது தான் காரணம். இதனால் மட்டுமே அவர்களால் அதிக மெடல்கள் வாங்க முடிகிறது.
இது தெரியாமல் வெளிநாட்டு உணவுமுறையை நாம் பின்பற்றுவதால் தான் நம்மால் ஒலிம்பிக்கில் ஒரு தங்க மெடல் கூட வாங்க முடியவில்லை.
புராணத்தில் உள்ள சரஸ்வதி நதியைத் தேடுவதற்கும் சஞ்சீவி மலையைத் தேடுவதற்கும் முயற்சி எடுத்த பாஜக அரசு, மனித உயிரை விடவும் பசுவே முக்கியமானது என்னும் அளவிற்கு தியாகக் கொள்கையைக் கொண்டுள்ள மேதகு மோடி அரசு, இதை பற்றி ஆராய்ந்து நமது விளையாட்டு வீரர்களுக்கு மாட்டு மூத்திரத்தில் இருந்து தயாரிக்கும் energy drink குடுப்பது பற்றி முடிவெடுக்க ஒரு துறை அமைத்து, அதற்கு நிதின் கட்கரியை அமைச்சராகவும், பாபா ராம்தேவை ஆராய்ச்சி குழுத் தலைவராகவும் நியமிக்க வேண்டும் என்பதே எம் போன்ற தேசபக்தர்களின் விருப்பம்.
எம்மைப் போன்று எதிர்காலம் பற்றி சிந்திக்கும் வேத விஞ்ஞானிகளை ஒருபோதும் மோடி கைவிடமாட்டார் என்பதால், கூடிய சீக்கிரம் ஆர் எஸ் எஸ்ஸுடன் கலந்தாய்ந்து இதை அவர் நடத்தி முடிப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
பாரத் மாத்தா கி ஜெய்!