நெட்டிசன் பகுதி:
பத்திரிகையாளர், எழுத்தாளர் சரவணன் சந்திரன் (Saravanan Chandran)   அவர்களின் முகநூல் பதிவு:
“இதை இந்த நேரத்தில் சொல்வதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றியதால் சொல்கிறேன். ஒருமுறை பாண்டிச்சேரி சென்றிருந்த போது பேராசிரியர் ஒருத்தரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பாண்டிச்சேரி ‘சாரம்’ பக்கத்தில் இருந்தது அவ்வீடு. அவருடைய மனைவியின் தாத்தா ஒரு டிராயிங் மாஸ்டர். அவருடைய பெயர் வெங்கடேஷன். மாஸ்டரென்றால் அந்தக் காலத்து டிராயிங் மாஸ்டர். வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, கிளம்பும் போது தற்செயலாக போட்டோ பிரேம் செய்யப்பட்ட ஒரு ஆவணத்தைப் பார்த்தேன். கிட்டத்தட்ட அது ஒரு மூலையில் கிடந்தது.
0
எடுத்துப் பார்த்தால், அவர் ‘செவாலியே’ விருது வாங்கியதற்கான ஆவணம்!
அந்த விருதைப் பற்றி அங்கே யாருக்கும் தெரியவில்லை. ஏதோ வாங்கியிருக்கிறார் என பிரேம் செய்து மாட்டியிருக்கிறார்கள். அந்தத் தெரு முனையில் இருந்தவருக்குக்கூட அவர் இந்த விருதை வாங்கியிருக்கும் விஷயம் மருந்திற்கும் தெரியாது. வருத்தமாக இருந்தது.
இதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ளலாம். அதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதில்தான் இந்த விஷயத்தில் உங்களது சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது