‘ஹம்ப்டிடு:
ஸ்திரேலியாவில் பள்ளி ஒன்றில் உயிருள்ள முதலைகளை விட்டு சென்றவர்களை போலீசார்தேடி வருகின்றனர்.
mudalai1
ஆஸ்திரேலியாவின் ஹம்ப்டி டூ நகரில் உள்ள ஒரு பள்ளி அலுவலகத்துக்குள் சில விஷமிகள்  மூன்று உயிருள்ள முதலைகளை அவிழ்த்துவிட்டு அலுவலகத்தையும் சூறையாடிச் சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
பதிவான காட்சியில் முதலில் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதன் வழியே மூன்று முதலைகள் உள்ளே விடப்படுகின்றது. பின்னர் கதவை உடைத்துகொண்டு நான்கு முகமூடி அணிந்த ஆசாமிகள் உள்ளே நுழைந்து சில பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர். வந்தவர்கள் யார் ,அவர்கள் அலுவலகத்துக்குள் முதலைகளை விட்டது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.
முதலைகளை பிடிக்க வந்த வனத்துறை அதிகாரிகள் முதலைகளின் வாய் கட்டப்பட்டிருந்ததாகவும் அவை மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய போலீசார் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.  அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் பிராணிவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்திய மதிப்பின்படி சுமார் 25 லட்சம் அபராதமாகக் கட்டவேண்டியதிருக்கும் என்று தெரியவருகிறது.