துருக்கியில் 50 பேர் கொல்லப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர் 13 வயது சிறுவன் என்ற அதிர்ச்சிகர தகவலை துருக்கி அதிபர் வெளியிட்டுள்ளார்.
துருக்கியில் காசியண்டெப் நகரில் ஒரு திருமண விழாவில் திடீரென குண்டு வெடித்தது. இதில் சுமார் ஐம்பது பேர் பலியானார்கள். இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்றும், இத்தாக்குதலில் ஈடுபட்டவர் சுமார் 13 வயது சிறுவன் என்றும் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான். தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர், தற்போது குர்திஷ் போராளிகளிடம் நடந்த சண்டையில் தோற்றனர்; இந்த தாக்குதலுக்கு பழிவாங்கு ஐ.எஸ். அமைப்பினர் இந்த தற்கொலை படைத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு 13 வயது சிறுவனை, குண்டுதாரியாக பயன்படுத்தியிருக்கின்றனர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel