சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசின் லூங், இன்று நடைபெற்ற “தேசிய பேரணி 2016” – விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது பேச்சு ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் நேரலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

நாட்டுநலன், இளைஞர் முன்னேற்றம், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம், கல்வி, பொருளாதார வளர்ச்சி, சர்வதேச உறவு, பயங்கரவாத எதிர்ப்பு, அண்டை நாடுகளுடனான நல்லுறவு என்று லீ ஹூசைன் லூங் பேச்சு சிறப்பாக சென்றுகொண்டிருந்தது.
“நாட்டின் குடியரசுத்தலைவர் பொறுப்பிற்கு யார் வேண்டுமானாலும் வரமுடியும் அவர் இங்குள்ள சீனராகவும் இருக்கலாம், இந்திய வம்சாவளியினராகவும் இருக்கலாம் அதற்கு மதமோ, மொழியோ, இனமோ தடையேயில்லை.. “ என்று பேசிக்கொண்டிருந்த வேளையில் திடுமென அவரது குரல் கம்மியது. திடீரென நிற்க முடியாமல் சரிந்துவிட்டார்.
அத்துடன் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது சிங்கப்பூரில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ செய்திகள், லீ உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கிறது.
“பெரிய பாதிப்பு இல்லை. மயக்கத்தில் இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்” என்று தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூர் அதிபர் லீ பேச்சு.. வீடியோ:
https://www.facebook.com/allsgstuff/videos/vb.1993145654159487/2285930528214330/?type=2&theater
Patrikai.com official YouTube Channel