Afternoon news
🌏சக வீரரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜெளரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் சக வீரர் ஒருவரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர், பின்னர் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
🌏மகனை பார்க்க வந்து மாயமான பெண் கும்பகோணம் அருகே கொன்று புதைப்புதிருச்சியில் மகனை பார்த்துவிட்டு சென்று மாயமான பெண்ணை கும்பகோணம் அருகே கொலை செய்து, புதைத்ததாக போலீஸார் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
🌏3-ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் கொலை செய்த தந்தைகும்மிடிப்பூண்டி அருகே மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், அக் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
jaliikatuu
🌏ஜல்லிக்கட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற வேண்டுமானால் மத்திய அரசு சட்ட திருத்தம் அல்லது புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
🌏மாணவர் தற்கொலை விவகாரம்: மாநகராட்சி கல்வி அதிகாரி விசாரணை  கோவை வடவள்ளி பகுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கல்வி அதிகாரி புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளார். வடவள்ளி பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மூன்றாவது மகன் பாபு(14). இவர் வெங்கிட்டாபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த திங்கள்கிழமை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் காரணம் என்று அவர் கடிதம் எழுதியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வடவள்ளி காவல் துறையினர் தற்கொலை பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாநகராட்சி பள்ளிகளின் மாவட்டக் கல்வி அதிகாரி உமா, புதன்கிழமை காலை சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள், மாணவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினார்.
🌏மதிமுக ஒன்றியச் செயலர் மகள் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு உசிலம்பட்டி அருகே மதிமுக ஒன்றியச் செயலரின் மகளைக் கடத்திச் சென்றதாக 4 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
pattam
🌏தில்லியில் மாஞ்சா நூலால் ஒரே நாளில் 200 பறவைகள் படுகாயம். தில்லியில் மாஞ்சா நூலில் சிக்கி, புதன்கிழமை ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட பறவைகள் படுகாயம் அடைந்தன.. பட்டம் பறக்கவிட பயன்படுத்தப்படும் சீன மாஞ்சா நூல், மனிதர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தில்லியில் சுதந்திர தினம், ரக்ஷா பந்தனையொட்டி பொதுமக்கள் பட்டம் பறக்க விடுவது வழக்கம். இதையொட்டி, கடந்த 13-ஆம் தேதி முதல் நகரில் ஆங்காங்கே பட்டங்கள் பறக்கவிடப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மாஞ்சா நூலில் சிக்கி, ஏராளமான பறவைகள் படுகாயம் அடையும் சம்பவங்களும் நிகழுகின்றன. தில்லியில் கடந்த 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சுமார் 500 பறவைகள் மாஞ்சா நூலால் காயமடைந்துள்ளன.
🌏தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை; சட்டப் போராட்டத்துக்கும் தயார் : கர்நாடக அமைச்சர் சிவக்குமார். கர்நாடகத்தில் நிலவும் வறட்சி காரணமாக வேளாண் பணிகளுக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தேவையைச் சமாளிக்க முடியாமல் மாநில அரசு திணறும் சூழலில் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்து விடுவது சாத்தியமில்லை என்றார் கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார். இதுதொடர்பாக தமிழக அரசு சட்டப் போராட்டத்தை மேற்கொண்டாலும், அதை எதிர்கொள்ள கர்நாடகம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
kutralam600
🌏குற்றாலத்தில் குளிக்க தடை. குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவியது. இதனால் அருவிகளில் வரும் நீரின் அளவு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் குற்றாலத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குற்றாலம் பேரருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
🌏மும்பையில் மரத்தின் மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மரத்தின் மீது வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
🌏காஷ்மீரில் 60 பயங்கரவாதிகள் பதுங்கல். காஷ்மீரில் நிலவி வரும் பதற்றத்தை தணிய விடாமல் செய்வதற்காக வடக்கு காஷ்மீரின் குப்வாரா, உரி பகுதிகளில் சுமார் 60 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் காஷ்மீரின் பல பகுதிகளில் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் அவ்வப்போது இந்தியர்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து கலவரத்தை தூண்டி விட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் இவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
🌏தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 3 பேர் பலி தலைநகர் தில்லியில் உள்ள தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🌏பீகாரில் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் பறிமுதல்: 5 பேர் கைது. பீகார்: பீகார் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 300 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🌏ஓடும் ரயிலில் துளை போட்டு கோடிக்கணக்கில் பணம் கொள்ளைப்போனதால் கோவையில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு 700 கோடி ரூபாயுடன் வந்த 3 கன்டெய்னர் லாரிகள் இரவானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
🌏சென்னை நகரில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் இன்னும் தூர்வாரப்படவில்லை. மழையை எதிர்கொள்ளும் வசதிகள் சென்னையில் செய்யப்படவில்லை என கள ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
chembarambakkam_2626732f
🌏செம்பரப்பாக்கம், பூண்டி, புழல் ஏரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.
🌏காஷ்மீர் விவகாரம் குறித்து வெளியுறவுச் செயலர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது.
🌏வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
🌏வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியுமான வி.கே. சிங்கின் மனைவி பாரதி சிங், தன்னிடம் ஒருவர் ரூ.2 கோடி கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.
🌏ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் மொத்தம் ரூ.34,600 கோடி நிலுவைத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
🌏வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைத்து முதியோருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
🌏சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றியை ரத்துச் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நான்கு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென அவருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌏திருவள்ளூர் அருகே உள்ள தொடக்கப் பள்ளி வகுப்பறையில் உடைந்த மது புட்டிகள், ரத்தக் கறை இருந்ததால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
🌏நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் –ஜி.கே.வாசன்
 
🌏நெய்வேலி வட்டம் 5-இல் 65 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணியை என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா அடிக்கல் நாட்டி நேற்று தொடங்கி வைத்தார்.
🌏மதுரையில் காவல் பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்குரைஞர் கைது செய்யப்பட்டார்.
🌏நிதி மோசடியில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட், அவரது கணவர் மற்றும் அவர்களது 2 தனியார் தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட வழக்கில் உரிய பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அளித்தது.
🌏கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் நடத்தப்படும் தஹி ஹண்டி என்ற பெயரிலான உறியடி விழாவில் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் பங்கேற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌏பிகார் மாநிலத்தில் நடந்த இடைநிலைக் கல்வி தேர்வு முறைகேடு தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (ஹெச்.ஏ.எம்) கட்சியின் ஒளரங்காபாத் மாவட்டத் தலைவர் அஜய் குமார் சிங்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) போலீஸார் கைது செய்தனர்.
🌏காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதே முதல் பணியாக இருக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத்
🌏ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜெளரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் சக வீரர் ஒருவரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர், பின்னர் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
🌏திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. ரேணுகா சின்ஹா மாரடைப்பு காரணமாக புதன்கிழமை திடீரென காலமானார். அவருக்கு வயது 67.
🌏இந்தியாவும், வங்கதேசமும் இணைந்து திரைப்படங்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
🌏பிகார் மாநிலம், தனாபூர் மாவட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் அசோக் ஜெய்ஸ்வால் மர்ம நபர்களால் நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
🌏சட்டப்பேரவை கூட்டத்தொடரை முழுமையாகப் புறக்கணிக்கும் முடிவை திமுக எடுக்காது– எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
🌏நடிகர் மாதவன் மீதான நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பான வழக்கு விசாரணையை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று முடித்து வைத்து உத்தரவிட்டது.
🌏கடந்த 7 மாதங்களாக முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிலுவைத் தொகையை தர மின்வாரியம் தாமதம் செய்வதாகக் கூறி, ரூ. 20 கோடிக்கான ஒப்பந்தப்புள்ளியை ஒப்பந்ததாரர்கள் நேற்று ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர்.
🌏ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்றார் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்.
🌏சென்னை பெரு மழை, வெள்ளப் பாதிப்புகளுக்கு இயற்கை மீதும், தமிழக அரசு மீதும் பழியை சுமத்தி, மத்திய உள்துறை தனது பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்வது சரியல்ல என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
🌏2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவை கொன்றதாக கடந்த மே மாதம் பரபரப்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கே. பிரபாகரனை (24) காணவில்லை. அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் சிபிஐ அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
viako
🌏சட்டப் பேரவையில் திமுக, அதிமுகவினர் ஜனநாயகத்தை மதிப்பதில்லை: வைகோ.
🌏அமைச்சரிடம் மன்னிப்பு கேட்காததால் எனக்கு பல வழிகளில் மனரீதியாக தொல்லை கொடுத்து பழிவாங்கி விட்டனர் என்று கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அனுபமா ஷெனால் டெல்லியில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
🌏வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு மும்பையிலிருந்து விழுப்புரம் வழியாக சிறப்பு ரயிலை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
🌏சென்னை, தியாகராய நகரில் 6 அடுக்கு நவீன வாகன நிறுத்தம் அமைக்கப்படும்– உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
🌏ஜம்மு-காஷ்மீர் பிரச்னை தீவிரமடைந்ததற்கு மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜ., கூட்டணி அரசே காரணம்– ப.சிதம்பரம்
🌏சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், நடைமேடைவிஸ்தரிப்பு பணிகள் நேற்று துவங்கின.
🌏சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை போன வழக்கில் போலீஸ் உடையணிந்து வந்தவரின் படம் வரையப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு தினங்களுக்குள் அதை வெளியிட்டு விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
 
🌏கல்வி ஒளிபரப்புச் சேவைக்காக 32 தொலைக்காட்சி அலைவரிசைகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் தொடங்கவுள்ளது.
🌏ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர், கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
🌏காவிரி விவகாரத்தில் கர்நாடகவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு – தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
rosiya
🌏தமிழக கவர்னராக ரோசய்யா மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பார் : மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🌏சம்பா சாகுபடிக்கு ரூ.64 கோடி மானியம் – தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
🌏இரண்டு வாரங்களில் வேந்தர்  மூவிஸ் மதனை கைது செய்து விடுவோம் என்றும், தேவைப்பட்டால் பச்சமுத்துவை கைது செய்ய தயக்கம் ஏதுமில்லை என்றும் கூறியுள்ளார் – தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பதில்.
🌏38,000 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது துருக்கி அரசு.
🌏நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடியில் டாஸ்மாக் கடையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து 125 மது பாட்டில் திருட்டு.
🌏நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் மனைவி விபத்தில் உயிரிழந்ததையடுத்து இன்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
🌏சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சபாநாயகர் தனபால் உருவ பொம்மை எரிப்பு.
🌏அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்  எம்.எச். ஜவாஹிருல்லா அறிக்கை.
🌏வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக பாம்பன் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசி வருகிறது. இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது/gold
🌏சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 2,985 ரூபாய்க்கும்,
சவரனுக்கு 72 ரூபாய் சரிந்து, 23,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
பிளாட்டினம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து, 3,156 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் சரிந்து, 25,248 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, 50,500 ரூபாய்க்கு விற்பனையானது.