மணிப்பூர்:
‘அரசியலில் களமிறங்கும் எனது முடிவில் மாற்றமில்லை’ என்று மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான இரோம் ஷர்மிளா உறுதிபட தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகார ச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா கடந்த செவ்வாய் கிழமையன்று, போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
இதையடுத்து அவர் அரசியலில் நுழைய உள்ளதாக அறிவித்தார். அவரின் அரசியல் முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. அவரின் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சில தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து ஷர்மிளாவுக்கு மிரட்டல் கூட வந்ததாக தகவல்கள் கூறுகின்றனர்.
இருந்தாலும், ஷர்மிளா தனது முடிவில் உறுதியாக உள்ளார். தான் நினைத்ததை முடித்தே தீருவேன் என்று உறுதியாக உள்ளார். வரும் 2017-ம் ஆண்டு மணிப்பூரில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலி களம் புக உறுதியாகக உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
தான் அரசியலில் நுழையும் எண்ணத்தில் மாற்றமில்லை என அவர் தெரிவித்தார்.