சேலம்:
சிறையில் முப்பது பேரால் தாக்கப்பட்டதாக சொல்லும் இயற்கை ஆர்வலர் பியூஸ் மனுஷ் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று உண்மையறியும் குழு கேள்வி எழுப்பி உள்ளது.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியதாக சேலம்மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
piyush
மத்திய சிறையில் ஒரு வார காலம் அடைக்கப்பட்டிருந்த தன்னை சிறைக் காவலர்கள் 20, 30பேர் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதாக பியூஷ் மானுஷ் புகார் தெரிவித்திருந்தார். . இந்தச்சம்பவம் தொடர்பாக சிறைத்துறை சார்பில் விசாரணை நடைபெற்றது..
இதற்கிடையே, தேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் மணிகண்டன்,ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் உண்மை அறியும் குழு அமைத்து பியூஸ் மானுஷ்தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரித்தனர். . இந்த குழுவின் அறிக்கை சேலத்தில்வெளியிடப்பட்டது.
அதன் பிறகு உண்மையறியும் குழு, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:
“சேலம் மத்திய சிறையில் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவிசாரிக்க உண்மைக் கண்டறியும் குழு உருவாக்கப்பட்டது.  இந்தக் குழு  பியூஷ் மானுஷுடன் கைது செய்யப்பட்ட இருவரிடமும், சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்களிடமும் விவரம் கேட்டறிந்தது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த பியூஷ் மானுஷ் கண்ணியமாக நடத்தப்பட்டார்  என்பது விசாரணையில் தெரியவருகிறது. அவர்மீது   எந்தவிதத் தாக்குதலும்   நடக்கவில்லை. சிறையில் 30 பேர் தாக்கியதாகக் கூறும் பியூஷ் மானுஷ், இதுவரை எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை  பெறவில்லை என்பதையும் எங்கள் குழு கண்டறிந்துள்ளது.
எங்களது அறிக்கை  தமிழக முதல்வர்,  உள்துறைச் செயலர்,  காவல் துறைத் தலைவர்,  சேலம் மாநகர   ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று  உண்மையறியும் குழுவினர் தெரிவித்தனர்.