பெய்ஜிங்:
சீனா 1000 இயந்திரமனிதர்களை உருவாக்கி நடனமாட வைத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.
சீனாவின் கியுண்டாவ் நகரில் இயந்திர மனிதர்களின் (ரோபோ) நடனம் நடைபெற்றது. கின்னஸ் சாதனைக்காக இந்த நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ரோபோக்களின் நடன நிகழ்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/08/Most-1000-DANCING-ROBOTS-SET-GUINESS-RECORD.mp4[/KGVID]
ஏற்கனவே 500 இயந்திர மனிதர்கள் (ரோபோ) ஒன்றாக நடனமாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் இருமடங்கு அதிகமான ரோபோக்களை வைத்து புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
நடனத்தில் பங்கேற்ற ஒவ்வொரு ரோபோக்களும் 43.8 சென்டி மீட்டர் உயரம் கொண்டவை. ஆயிரம் ரோபோக்கள் ஒன்றாக இணைந்து நடனமாடியது பொதுமக்ககளை வெகுவாக கவர்ந்தது.