k-r

ருகாலத்தில் ரஜினி – கமலைவிட அவர்களது ரசிகர்கள் போடும் சண்டை ரொம்ப பேமஸ்.  அடிதடி வெட்டுகுத்து என போலீஸ் கேஸ் ஆகி, தினசரி செய்தியயாக வந்த கதையெல்லாம் உண்டு.

ஒரு கட்டத்தில் இருவரும் “நண்பேன்டா” ஸ்டைலில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவு புகழ..ரசிகர்கள் சண்டை கொஞ்சம் ஓய்ந்தது. சமீபகாலமாக சமூகவலைதளங்களல் அவ்வப்போது சிறு சிறு ஊடல்கள் இருதரப்புக்கும் வருவது உண்டு.

மற்றபடி ரஜினியும் கமலும் “மாற்றான்” பட இரட்டையர் மாதிரி ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொண்டார்கள்.

ஆனாலும் இருவருக்கும் இடையில் மறைமுக ஈகோ யுத்தம் உண்டு என்பதாகவே செய்திகள் வந்தன. பிரம்மாண் செலவில் தயாராகும் ரஜினி படங்கள், கமலை உறுத்தியதால்தான் அவரும்  அதே ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தார் என்பவரும் உண்டு. ( சமீபத்திய பாபநாசம் படத்துக்கு முன்பு வரையில்.)

அதே போல ரஜினியைத்து ஷங்கர் இயக்கவிருக்கும் எந்திரன் 2 படத்துக்கு கமலை வில்லனாக நடிக்க அழைத்ததாகவும், அதனால் கமல் அப்செட் ஆனதாகவும் தகவல் உண்டு.

இந்த நிலையில்தான் நடிகர் சங்க தேர்தல் வந்தது. வழக்கம்போல சரத் – விசால் இரு அணிகளுக்கும் பொதுவானவராக  காண்பித்துக்கொண்டார் ரஜினி. ஆதரவு கேட்டு வந்த இரு தரப்பினருக்கும் டீ கொடுத்து உபசரித்தார். கூட்டம் நடத்த அவரது மண்டபத்தைக் கேட்ட இரு தரப்புக்கும் கொடுத்தார்.. (கட்டணத்தோடுதான்.)

அதே போல சங்க தேர்தலில் ஓட்டளிக்க வந்தபோது, “நடிகர்களுக்குள் ஜாதி மதம் இனம் கிடையாது” என்று சரத்துக்கும், “தமிழ்நாடு நடிகர் சங்கம்னு பெயர் வைக்கணும்” என்று விசாலுக்கும் இடி கொடுத்துச் சென்றார்.

ஆனால் கமல், வழக்கம்போல வெளிப்படையாக செயல்பட்டார். விசால் அணிக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு, “இந்திய நடிகர் சங்கம்”என்று பெயர் வைக்கலாம்” என்று சொல்லி ரஜினிக்கு பஞ்ச் கொடுத்தார்.

இதற்கிடையில், “நடிகர் சங்கத்துக்கு ரஜினியை கவுரவ தலைவராகவும், கமலை கவுரவ ஆலோசகராவும் நியமிப்போம்” என்றார்கள் தேர்திலில் வென்ற விஷால் அணியினர்.

இந்த நிலையில் ரஜினிக்கு வந்த ஒரு கடிதம், அவரை கடுமையாக விமர்சித்திருந்தது.  அதில் உள்ள பல விசயங்கள் ரஜினியை வருத்தம்கொள்ள வைக்க, நடிகர் சங்கத்தில் எந்த பொறுப்பையும் ஏற்பதில்லை என்று சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லிவிட்டார்.

கமலோ, “ஆலோசகர் போன்ற பதவியை விரும்பவில்லை” என்று வெளிப்படையாகவே சொன்னார். பிறகு சங்கத்தின் புதிய நிர்வாகிகள், “அறங்காவலராக பொறுப்பேற்றே ஆகவேண்டும்” என்று வற்புறுத்த கமலும் ஏற்றுக்கொண்டார்.

அப்போது கமல் ஒரு நிபந்தனை விதித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, “நான் டிரஸ்டியாக (அறங்காவலர்) பொறுப்பேற்க வேண்டும் என்றால், ரஜினி அந்த பொறுப்பிற்கு வரக்கூடாது” என்று கமல் கூறினாராம்.

இதற்கு புதிய நிர்வாகிகளும் ஒப்புக்கொண்டார்கள். மீண்டும் அவர்கள் ரஜினியை அணுகவே இல்லை. இதைப்பற்றி எல்லாம் ரஜினி சிந்திக்கவே இல்லை. தனக்கு வந்த “மொட்டை கடிதம்” வந்தபோதே, சங்கமும் வேண்டாம், பதவியும் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் அவர். கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுவிட்டார்.

ஆனால் கடந்த சில நாட்களாக இங்கே தன்னை வைத்து நடக்கும் பாலிடிக்ஸ்களை தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் தெரிந்து கொண்டுதான் இருக்கிறாராம்.  இதனால் கமல் மீது வருத்தத்தில் சில வார்த்தைகளை, தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆக, இதுவரை நிலவிய பனிப்போர், வெளிப்டையாக வெடிக்கக்கூடும். இருவரது ரசிகர்களும் கட்டிப்புரண்டு உருளாத குறையாக அடித்துக்கொள்வார்களே என்பதை நினைத்தால்தான் பகீரென இருக்கிறது!