டில்லி:
ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் அடிக்கடி  ‘அம்மா’ (ஜெயலலிதா) புராணம் பாடினார். இதனால் ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியன், நவநீதகிருஷ்ணனை கிண்டலடிக்க,  சிரிப்பலையால் ராஜ்யசபா அதிர்ந்தது.

நவநீதகிருஷ்ணன்
நவநீதகிருஷ்ணன்

ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதம் இன்று பிற்பகல் துவங்கியது.  நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மசோதாவை அறிமுகம் செய்து விவாதத்தை தொடக்கி வைத்தார். விவாதத்தின் போது பங்கேற்று பேசிய அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன், “எனக்கு, இங்கு பேச வாய்ப்பளித்த ‘அம்மாவுக்கு’ நன்றி” என்று என்று கூறி தனது பேச்சை தொடக்கினார்.
நாடாளுமன்றத்தில் பேசும் அனைத்து அதிமுக உறுப்பினர்களுமே, அது லோக்சபாவோ, ராஜ்யசபாவோ, தவறாமல் ‘அம்மாவுக்கு’ நன்றி சொல்வது வழக்கமாகவே இருக்கிறது.  அதிமுக உறுப்பினர்களின் இந்த “அம்மா” பேச்சைக் கேட்டு பிற மாநில எம்.பிக்கள் கிண்டலுடன் சிரிப்பார்கள். ஆனாலும் அதிமுக எம்.பிக்கள் இதற்கெல்லாம் அசருவதில்லை.
குரியன்
குரியன்

இன்று நவநீதகிருஷ்ணனும் அம்மா புராணத்தோடு தனது பேச்சை துவங்கினார். பிறகு “இந்த மசோதாவில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. அதிமுக இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறது. இதில் உள்ள சில அம்சங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளன” என்றவர், தனது உரையை முடிக்கும்போது, மீண்டும் ‘அம்மாவுக்கு நன்றி’ என சொல்லி அமர்ந்தார்.
அப்போது அவை தலைவர் இருக்கையில், துணை தலைவர் பி.ஜே.குரியன் அமர்ந்திருந்தார். நவநீதகிருஷ்ணனினி அம்மா பேச்சால் என்ன நினைத்தாரோ…  நவீதகிருஷ்ணனை நோக்கி..  “பேச வாய்ப்பு கொடுத்த எனக்கு நீங்கள் நன்றி சொல்லவில்லையே” என்று கேட்டார்.
நவநீதகிருஷ்ணன் சங்கடமாய் சிரிக்க.. அவரைப் பார்த்து  ஒட்டுமொத்த அவையும் சிரிக்க… ராஜ்யசபா அதிர்ந்தது.
 
a