ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், சவுதி அரேபியாவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் உணவு இல்லாமல் பட்டினியால் வாடிவருகின்றனர்.
இதனையடுத்து, இந்தியத் தொழிலாலர்கள் எங்கெல்லாம் சுரண்டப்படுகின்றார்கள் என்ற தகவலைத் திரட்டியதில் நமக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது,
கடந்த மூன்று ஆண்டுகளில், ஒன்பது நாடுகளில் இந்திய தூதரங்களுக்கு இந்திய தொழிலாளர்களிடமிருந்து வந்து குவிந்துள்ள 55119 புகார்களில் 87 சதவீதம் ஆறு வளைகுடா நாடுகளிலிருந்து வந்துள்ளன.
மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, அந்தப் புகார்களில் பாதிக்கும் மேற்பட்டவை கத்தார் மற்றும் சவூதி அரேபியா ல் இருந்து வந்துள்ளது.
இந்திய தொழிலாளர்கள் தவறான நடத்தப்படுவது மற்றும்உழைப்புச் சுரண்டல்” போன்ற 55.119 புகார்களை இதுவரை குவிந்துள்ளன.
மக்களவை வெளிவிவகார அமைச்சின் தகவல்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் ,
இந்த ஒன்பது நாடுகளில் 55,119 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி,
கத்தாரில் உள்ள தூதரகத்திற்கு அதிகப்பட்சமாக 13.624 புகார்களும்
சவுதி அரேபியா (11,195), குவைத் (11,103) மற்றும் மலேஷியா (6,346) புகார்களும் குவிந்துள்ளன.
வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் , கடந்த ஜூலை,30, 2016 அன்று, சவுதி அரேபியாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய தொழிலாளர்கள் பட்டினியால் வாடுவதை ஒப்புக் கொண்டார்.
அவர் வெளியிட்ட தொடர்ச்சியான ட்வீட் (tweet) மூலம், “சவுதி அரேபியாவில் வேலையிழந்த இந்தியத் தொழிலாளி ஒருவரும் உணவு இல்லாமல் தவிக்க விடமாட்டோம்” என்று தெரிவித்து இருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 2015, இந்தியா ஸ்பெண்ட் அறிக்கைபடி “, மோசமான பணி நிலைமைகள் காரணமாக இந்தியத் தொழிலாளர்கள் மரணமடையும் வாய்ப்பு அமெரிக்காவை விடச் சவூதி அரேபியாவில் பத்து மடங்கு அதிகமாகும்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான் மற்றும் குவைத்தில் பணியாற்றும் ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களில் 65 – 78 இந்தியர்கள் மரணமடைகின்றனர்.
ஆறு வளைகுடா நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 69 இந்தியர்கள் இறக்கின்றனர்.
உலகின் மற்ற நாடுகளில் சராசரியாக 27 இந்தியர்கள் இறக்கின்றனர்.