திமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி, அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் டில்லியில்  தற்போது நடைபெற்று வருகின்றது.  இதில் பங்கேற்கும் எம்பிக்கள் வார இறுதி நாட்களில்  விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றுவிட்டு, மீண்டும் டில்லி வருவர்.
அதன்படி, டில்லியில் இருந்து சென்னைக்கு செல்ல தமிழக எம்.பி.,-க்கள் திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் கடந்த சனிக்கிழமை, டில்லி விமான நிலையம் வந்தனர். அப்போது இருவருக்குமிடைய வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் திருச்சி சிவாவை, சசிகலா புஷ்பா அறைந்தார்.
பிறகு, “அதிமுக ஆட்சியைப் பற்றி திருச்சி சிவா கிண்டலாக பேசியதலா அறைந்தேன்” என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
aa
இதற்கிடையே, சசிகலா புஷ்பாவை, எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக இன்று காலை முதல் ஒரு தகவல் பரவியது. அதை உறுதி செய்யும் விதத்தில் சசிகலா புஷ்பாவை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அக் கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
இந்த நிலையில்,  இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரில் சசிகலா புஷ்பா பங்கேற்று பேசினார். அப்போது,  தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருபதாக கண்ணீர்மல்க முறையிட்டார்.
“ஜெயலலிதா என்னை அறைந்தார்”
“கட்சியை விட்டு விலக கூறுகிறார்”
” எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது”
“தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை”  என்று அவர் பேசினார்.
இதையடுத்து, மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது.

நீக்க உத்தரவு
நீக்க உத்தரவு

இப்படி  சசிகலா புஷ்பா பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை கட்சியில் இருந்து நீக்கி அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் இந்த முடிவு எடுக்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சசிகலா புஷ்பா, தனது  ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம்  இன்று வழங்குவார் என்பது உறுதியாகி உள்ளது.