புதுடில்லி:
ஆசியாவின் பிரசித்திபெற்ற மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர் தேர்வாகி உள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபராக விளங்கியவர் ரமோன் மகசேசே. 1957 ஆம் ஆண்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது நினைவாக இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு இந்தியர்கள் உட்பட 3 நபர்கள், 3 அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகியோருக்கு மகசேசே விருது வழங்கப்படுகிறது.
கர்நாடகா இசைக் கலைஞரான டி.எம்கி.ருஷ்ணா இவ்விருதுக்கு தேர்வாகி உள்ளார். டி எம் கிருஷ்ணா சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஆர்வலரான பெஸ்வாடா வில்சன் . கர்நாடாக மாநிலத்தில் உள்ள தலித் குடும்பத்தில் பிறந்தவர் . இவரும் மகசேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு இந்தியர் ஆவார்.
மேலும் டோம்பெட் த்வாஃபா, ஜப்பான் ஓவர்சீஸ் கார்பரேஷன் தன்னார்வலர்கள், கோன்சிட்டா கேர்பியோ – மொரேல்ஸ் மற்றும் வியென்டைன் ரெஸ்க்யூக்கு இந்த ஆண்டின் மகசேசே விருதுகள் வழங்கப்படுகின்றன.