சென்னை:
தைவானில் இருந்து வந்த விமானத்தில் வந்த பார்சலில் பாம்பு இருந்த. இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று தைவானில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் நிறைய பார்சல்கள் வந்ததது. அதனை சோதனையிட்ட அதிகாரிகள் ஸ்பீடு போஸ்ட் தபால் பார்சல் ஒன்று வித்தியாசமாக இருந்ததை கண்டனர்.
அந்த பார்சலை அதிகாரிகள் திறந்து சோதனை செய்து பார்த்தபோது அதனுள் பாம்பு ஒன்று இருந்தது. இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பாம்பு பார்சல் சென்னை கேகேநகர் 68வது தெரு முகவரிக்கு வந்துள்ளது. அந்த பார்சலினுள், உபயோகித்த வீட்டு பொருட்களான காஸ் அடுப்பு, மிக்சி மற்றும் டிவிடி பிளேயர்கள் இருந்தன. அதனுள் ஒரு பையில், 1 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது. பார்சலை அனுப்பியவரின் முகவரி தைவான் மொழியில் இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை கேகேநகர் 68வது தெருவிற்கு சென்று விசாரணை நடத்தியபோது, அது போலி முகவரி என்பது தெரியவந்தது மலைப்பாம்பை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Patrikai.com official YouTube Channel