ஜெட்டா:
இந்தியாவில் மத ஒற்றுமைக்காக மோடியுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று மதபோதகர் ஜாகீர் நாயக் கூறியுள்ளார்.
மதத்தின் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருபவர் என்று அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்பட்டவர் ஜாகீர் நாயக்.தற்போது அவர் துபாயில் இருக்கிறார்.
பத்திரிகை ஒன்று அவர் அளித்த பேட்டி: மீடியாக்கள்தான் என்மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்தியாவுக்கு வரபயமா என்றால், எனக்கு பயம் இல்லை. இதுவரை ஒரு இந்தியஅரசு அதிகாரிகூட என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே ஊடகங்கள் நடத்தும் விசாரணைக்கு நான் வரத்தேவையில்லை.
நான் எப்போதும் வன்முறையை தூண்டும் பேச்சு பேசியது கிடையாது. எப்போதும் மனிதநேயத்தை வலியுறுத்தியே பேசியுள்ளேன். வங்கதேச பயங்கரவாதி எனது ரசிகன் என்றுதான் கூறியுள்ளான். இதில் என்ன தவறு இருக்கிறது ?
ஆனால் இந்திய மீடியாக்கள் என்னை பற்றி தவறாக சித்தரிக்கிறது. இதனை நிறுத்தி கொள்ளுமாறுகேட்டுகொள்கிறேன்.
பிரதமர் மோடி இந்து- முஸ்லிம் சமூகத்துக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்றால், நான் அதில் முழுமையாக செயல்பட தயார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர்நாயக்கின் பேச்சைகேட்டு இவ்வாறு மாறியதாக கூறியிருந்தான்.
இதையடுத்து மத்தியஅரசும், மராட்டிய அரசும் ஜாகீர்நாயக் தொடர்பான விஷயங்களை தீவிரமாக விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.