மது குடிப்பதால் உண்டாகும் 7 வகை புற்றுநோய்: ஆராய்ச்சியில் தகவல்
மது குடிப்பதற்கும் ஏழு வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. உடல்கூறியல் ரீதியான காரணங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், `அடிக்ஷன்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவுகளின்படி, மதுகுடிப்பதற்கும் புற்றநோய் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.மது குடிப்பதால், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து கூறுகையில், எந்த அளவு மது குடித்தாலும், அது தொடர் பழக்கமாக இருக்கும் நிலையில், ஆபத்தில்லாத குடிப்பழக்கம் என எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும், மதுப்பழக்கத்தால் ஐந்து லட்சம் பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஃப்ரிக்காவின் துணை சஹாரா நிலப்பரப்பில் தேனீக்களை வேட்டையாடும் மனிதர்களுக்கும், பறவை இனத்தை சேர்ந்த ஒரு வகை உயிரினத்துக்கும் இடையே உள்ள நன்கு ஆவணப்படுத்தப்பட்ட தொடர்பு ஓர் இரு வழி உரையாடல் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட குடியரசு கட்சியின் பரிந்துரையை ஏற்றபின் டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரையில், தான் அமெரிக்க அதிபரானால் மிக விரைவில் குற்றம் மற்றும் வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார்.
உலகின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு முக்கியமாக இந்தியா மற்றும் ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளில், இணையதள சேவையை வழங்கும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஒரு திட்டத்தின் மூலம் பெரிய அடியை முன்னெடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளது.
கடந்த வாரம் நீஸ் தாக்குதலின் போது, பொதுமக்களை கொன்று குவித்த லாரியை துரத்தியபடி ஸ்கூட்டரில் சென்ற பிரஞ்சுக்காரர் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார். ஃபிராங்க் என்ற பெயர் கொண்ட அந்த நபர், லாரியை பிடிப்பதற்காக தப்பியோட முயன்ற கூட்டத்திற்கு நடுவே தன் வாகனத்தை செலுத்தியதாக நீஸ்-மத்தன் என்ற செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.லாரி ஓட்டுநர் அறைக்கு கீழே இருந்த படியில் ஏறிய ஃபிராங்கை, லாரி ஓட்டுநர் துப்பாக்கியால் குறிவைத்து சுட்ட போதும், ஓட்டுநர் அறையில் திறந்திருந்த ஜன்னல் கதவுகள் மூலம் ஆயுததாரியை தாக்கி இருக்கிறார்.துப்பாக்கி சூடு குறி தவறிய நிலையில்,பிராங்க் லாரியிலிருந்து கிழே விழுந்துள்ளார்.நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் ஃபிராங், விமான நிலைய ஊழியர் ஆவார். இந்த தாக்குதலில் ஃபிராங்கிற்கு பெரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், விலா எலும்பு ஒன்றும் உடைந்துள்ளது.லாரி ஓட்டுநரை அடித்த இடது கையும் வீக்கம் அடைந்துள்ளது.
போருக்கு தயார் நிலையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரியோ 2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலங்கை அதிபர் வாழ்த்து
கடந்த வாரம் நீஸ் நகரில் 80 பேரை லாரி ஏற்றிக் கொன்ற துனீசிய நபருக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிரஞ்சு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் அன்வருல் ஹக் என்பவருடைய வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. இதையோட்டி பாஜக கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.
வீட்டில் தனியாக இருந்த 8-ஆம் வகுப்பு மாணவி தேஜாஸ்ரீயை கடந்த 2014-ஆம் ஆண்டு கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சேலம் நீதிமன்றம்.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள படகு ஒன்றில் 21 பெண் அகதிகளின் பிணம் கண்டெடுப்பு
கபாலி படத்துக்கு அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காததால் பேனர்களை கிழித்து வன்முறையில் ஈடுப்பட்டனர்…காசி தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் சிலருக்கு டிக்கெட் கிடைக்காததால் பேனர்களை கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர்.chennai
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் கபாலி திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் நிலையில், அந்தப் படத்தின் டிக்கெட்டுகள் தமிழகம் முழுவதுமே அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.
தாணுவின் மாஸ்டர் பிளான்: கபாலி டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்பனை செய்ய வற்புறுத்தியது அம்பலம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படம் இன்று வெளியானது. மி
கப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படத்தின் டிக்கெட் விலையின் உச்சத்தால் ரசிகர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்…இந்நிலையில் கபாலி டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்பனை செய்யுமாறு அந்த படத்தின் படத்தின் தயாரிப்பாளர் தாணு வறுபுறுத்தியதாக சென்னை காசி தியேட்டரின் உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது.
சென்னை காசி தியேட்டரில், கபாலி படத்தின் டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு விற்கப்பட்டதாக கூறி பிளாக்கில் ரூ.2000-க்கு விற்பனை செய்வதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த காசி தியேட்டர் உரிமையாளர் கூறும்போது, கபாலி பட தயாரிப்பாளரின் வற்புறுத்தலால், கபாலி படத்திற்கான மூன்று நாட்கள் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டன. இனி டிக்கெட் கிடையாது என்று கூறி, பிளாக்கில் ரூ.2000க்கு விற்பனை செய்தோம் என கூறியுள்ளார்.
கபாலி திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்ட், அதற்கு அரசின் 30 சதவீதம் வரிவிலக்கும் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் திரைப்படங்களுக்கு அரசு அளிக்கும் 30 சதவீத வரி விலக்கின் பயன் படம் பார்க்கும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. அரசின் வரி விலக்கை பெற்றுள்ளது கபாலி திரைப்படம். ஆனால் அதன் பயனை பொதுமக்களுக்கு அளிக்காமல் தனது வாயில் மட்டும் போட்டுக்கொள்கிறார் அதன் தயாரிப்பாளர். வரி விலக்கின் பயனையும் மக்களுக்கு அளிக்காமல், ரூ.120-க்கான டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்பனை செய்யுமாறு வற்புறுத்துவது எவ்வளவு மோசமான பண ஆசை பிடித்த செயல். பல இடங்களிலும் கபாலி டிக்கெட் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
விருப்பபட்டு அதிக விலை கொடுத்து ரசிகர்கள் வாங்கினால் என்ன செய்ய முடியும்..
மொடக்குறிச்சி அருகே காவிரி அற்றில் குளிக்கும்போது பள்ளி மாணவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியில், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் இலவசமாக கழிப்பறை கட்டுபவர்களுக்கு கபாலி டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
கபாலி படம் ஏமாற்றத்தை தருகிறது: இயக்குனர் சமுத்திரக்கனி ஓப்பன் டாக்
ரஞ்சித்தின் திரைக்கதை மற்றும் பின்னணி இசை மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக ஓப்பனாக தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
கபாலி திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடனும், வரவேற்புடனும் வெளியான இந்த திரைப்படம் நல்ல குவாலிட்டியுடன் இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 20 வயது இளம் பெண் அவர் வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது அதை ஒரு வாலிபர் பார்த்துள்ளார். அதனால் அந்த இளம்பெண் விரத்தியில் தற்கொலை செய்துக் கொண்டார்.
கபாலி படம் பார்க்க முடியவில்லை : டிவிட்டரில் ஒப்பாரி வைத்த பிரியாஆனந்த்
பாஜக தலைவர் ஒருவரின் இந்த விமர்சனத்தை அவரது சகோதரி, மகள் குறித்தானதாகவே நான் கருதுகிறேன். காரணம், என்னை நாடு முழுவதும் மக்கள் சகோதரியாகவே கருதுகிறார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
கபாலி பட விமர்சனம் பற்றி ஒருவரின் கருத்தை பற்றி தெரிந்து கொள்ள ரஜினி ஆவலுடன் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அவர் வேறு யாரும் அல்ல. ரஜினியின் ஆருயிர் நண்பர் ராஜ்பகதூர். தற்போது அவர் பெங்களூரில் வசிக்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் தூத்துக்குடி குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
5 பேர் மீது குண்டர் சட்டம். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் பாண்டு, நாகராஜன், மாவீரன், ஏழுமலை, மகுடேஸ்வரன் ஆகிய 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்
பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்
கள்ளக்காதலியை அடித்து உதைத்து, வீட்டை சூறையாடிய மூவர் கைது
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த சீரியம்பட்டி
14 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி சமையல் எண்ணெய் பறிமுதல்
பள்ளி மாணவி தற்கொலை: இரு பெண்களுக்கு 3 ஆண்டு சிறை: கோவை மகளிர் கோர்ட்
யானையால் கொல்லப்பட்ட பழங்குடியின பெண்னின் உடல் 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த நம்பியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வகுப்பறையில் தூக்கம்: தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யகோரி முற்றுகை
பாசானத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் : விவசாயிகள் எச்சரிக்கை…ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கண்கோட்டை பாசானத்தில் 24 ஆயிரத்தி 500 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது
திண்டுக்கல்லில் கபாலி திரைப்படம் பார்த்த சிம்பு
100 ஆண்டுகளுக்கு மேலான ஆலமரத்தை வெட்டக்கூடாது என வலியுறுத்தி போராட்டம்
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பெருந்தலையூர் ஊராட்சியில் உள்ள செரையாம்பாளையத்தில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவே இந்திய இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர்; பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் ‘ரேண்ஸ்டாட்’ நடத்திய ஆய்வில் தகவல்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து கூட்டாக சீன ராணுவம் ரோந்து
உனா தாக்குதல்: பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து கெஜ்ரிவால் ஆறுதல்
ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டவர் மும்பையில் கைது
பாராளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வீடியோ வெளியிட்ட ஆம் ஆத்மி எம்.பிக்கு எதிராக போர்க்கொடி
வடகொரியா அரசுக்கு சொந்தமான ஏர்கொரியா விமானம் யோங்யாங் நகரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தின் கேபினில் புகை வெளியானது. இதை கவனித்த சில பயணிகள் விமான சிப்பந்திகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக விமானம் சீனாவின் ஷென்யாங் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நிலையான வளர்ச்சி’ கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 110-வது இடம்
வங்காள தேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மூத்த மகனுக்கு 7 ஆண்டு சிறை சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அதிரடி தீர்ப்பு
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மலேசிய பிரதமருக்கு நெருக்கடி அமெரிக்கா நடவடிக்கையால் பரபரப்பு
டாக்கா ஓட்டல் தாக்குதலில் ஜமாத்துல் முஜாகிதீன் தலைவர் உள்பட 4 பேர் கைது
8 சார் கருவூல அலுவலகக் கட்டிடத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார்
கோரக்பூர் உரத் தொழிற்சாலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
செஞ்சி அருகே அப்பம்பட்டில் அமானுல்லா என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், அமானுல்லா வீட்டில் இருந்த ரூ.20,000 பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
சட்ட விரோதமாக அடுக்கி வைக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடைமையாக்கக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆட்சியர் தொடர்ந்த 49 வழக்குகளை மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலூர், கீழவளவு உள்ளிட்ட இடங்களில் அனுமதி இல்லாமல் கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாக வழக்கு தொடரப்பட்டது. பட்டா நிலங்களில் அடுக்கி வைக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடைமையாக்கக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மற்றும் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.