Nambikai Raj அவர்களின் முகநூல் விமர்சனம்:
q

 “சமீப ஆண்டுகளில் வெளியான ரஜினி படங்களில் பெருசா செலவு பண்ணி எடுக்காத படம்னு கேட்டா ‘கபாலி’ன்னு சொல்லிடலாம்.
படம் சூப்பரும் இல்லை சுமாரும் இல்லை , ரெண்டுக்கும் நடுவுல.
ரஜினியை ஒழுங்கா பயன்படுத்த தெரியாதவர் டைரக்டர் ரஞ்சித்துன்னுதான் நினைக்கிறேன்.
மலேசியாதான் கதைக்களம். ஆனா மலேசியாவையும் ஒழுங்கா காட்டலை. KL பெட்ரோனாஸ் டுவின் டவர் மட்டும்தான் மலேசியான்னு நினைச்சிட்டாங்கபோல.
கபாலி சென்னைக்கு வரும்போது சென்னைனு சொல்லிட்டு கிண்டி லீ மெரீடியன் ஹோட்டலோட முடிச்சிக்கிறாங்க.
அடுத்து கபாலி பாண்டிச்சேரி போகும்போது ஒட்டுமொத்த பாண்டிச்சேரியும் ‘ லீ கிளப்’ ஹோட்டலோட முடிஞ்சிடுது. பாண்டிச்சேரி ஆரோவில் வில்லாவில் நடக்கும் சண்டைக்காட்சி லாஜிக் இல்லாம புஸ்ஸ்ஸ்சுன்னு முடிஞ்சிடுது.
சரி கபாலி தாய்லாந்து போகிறாரே தாய்லாந்தையாவது ஒழுங்கா காட்டுவாங்கன்னு பார்த்தா அந்த தாய்லாந்து சண்டை காட்சியை செட் போட்டு எடுத்திருக்காங்கபோல.
வழக்கமா பட விநியோகஸ்தர்கள்தான் ரஜினி வீட்டு வாசல்ல போய் நிப்பாங்க. இந்த முறை ரசிகர்கள் போய் நிப்பாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா ஒவ்வொருத்தனும் அந்த அளவுக்கு பணம் கொடுத்து சினிமா டிக்கெட் வாங்கியிருக்கான்.”