ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு ஏற்கனவே ‘யு’ சான்று அளித்தது. இதை தொடர்ந்து அரசின் கேளிக்கை வரி விலக்கு குழுவினர் பார்ப்பதற்காக படம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு படம் அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற வேண்டும் என்றால் அந்த படம் தணிக்கை குழுவில் ‘யு’ சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இருக்க கூடாது. படத்துக்கு தமிழில் பெயர் சூட்டி இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதி முறைகள் இருக்கின்றன.
கபாலி படத்தை வரி விலக்கு குழுவினர் பார்த்து விட்டு, “ கபாலி படத்தில் வன்முறை காட்சிகள் இல்லை. மேலும் அரசின் கேளிக்கை வரி விலக்குக்கு உள்ள விதிகள் அனைத்தும் பொருந்தி இருக்கின்றன. ஆகவே இது வரிவிலக்குக்கு தகுதியான படம்” என்று பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து கபாலி படத்துக்கு அரசின் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“கபாலி” படத்தில் அதீத வன்முறை காட்சிகள் உள்ளன என்று கூறி சில நாடுகளில் சிறுவர்கள், இந்த படத்தைப் பார்க்க தடை செய்யப்பபட்டுள்ளது மலேசியாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், சிங்கப்பூரில் 28 வயதுக்கு உட்பட்டவர்களும் கபாலி படம் பார்க்க தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் “கபாலி” படத்துக்கு யு சர்டிபிகேட் ( அனைவரும் பார்க்கலாம்) அளிக்கப்பட்டுள்ளதோடு, வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel