வாஷிங்டன்:
அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் விண்வெளியை பற்றி ஆராய்ந்து வருகிறது.
நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சர்வதேச வானியல் குழுவினர் விண்வெளியை ஆராய்ச்சி செய்தனர்.
விண்வெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு கிரகங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறினர். 104 கிரகங்கள் இருப்பது 197 விஞ்ஞானிகளால் உறுதி செய்யப்பட்டுளது.
இந்த ஆராய்ச்சிக்கு கே-2 மிஷன் என பெயரிட்டு உள்ளனர்.