தைவான்:
சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்து எரிந்ததில் 26 சீன சுற்றுலா பயணிகள் உடல் கருகி இறந்தனர்.
தைவானின் தாவ்யான் நகரில் சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததாக தகவல்கள் கூறுகிறது.

சீனாவை சேர்ந்த 24 சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு டையூன் விமான நிலையம் நோக்கி சென்ற பஸ் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ரோட்டின் ஓரமாக இருந்த தடுப்பு சுவரில் மோதி தீ பிடித்தது.
பஸ்சின் முன் பகுதியில் தீ பிடித்து மளமளவென எரிந்ததாலும், டோர் முன்பகுதியில் இருந்ததாலும் சுற்றுலா பயணிகள் பஸ்சை விட்டு வெளியேற முடியவில்லை. அவர்களுடன் பஸ் டிரைவர் மற்றும் சுற்றுலா கைடு ஒருவரும் உடல் கருவி இறந்தனர்.

சுவரில் மோதியதால் பஸ்சில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து பஸ் தீ பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel