சென்னை:
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண அட்டை வழங்கும் திட்டம் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் 480 கோடி ரூபாய் செலவில் 28 லட்சத்து 5 ஆயிரத்து 578 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் இந்த கல்வி ஆண்டில் . 504 கோடி ரூபாய் செலவில் 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பயணடையும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யயப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.