சென்னை:
ரணம் அடைந்த சுவாதியின் கண்ணியத்தையும், நற்பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசுவதாக அவர்மீது பெண்கள் பாதுகாப்பு சங்கம் புகார் அளித்துள்ளளது.

கலைச்செல்வி
கலைச்செல்வி

கடந்த மாதம் கொல்லப்பட்ட சுவாதி கொலையில் ஏராளமான மர்ம முடிச்சுக்கள் உள்ளளன. இதற்கிடையில் சுவாதி மதம்மாற விரும்பினார் என்றும், ஆணவக்கொலை என்றும் அரசியல் கட்சியினர் மாறி மாறி சொல்லி பீதியை கிளப்புகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம்  தலைவி கலைச்சல்வி என்பவர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருமாவளவன் மீது  புகார் மனு அளித்துள்ளார்.
.               மனுவில் கூறிஇருப்பதாவது:- சுவாதியை கொலை செய்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுவாதியின் கண்ணியத்தையும், நற்பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசுகிறார் என்றும் மத பிரிவினைவாத குற்றங்களை தூண்டும் விதத்தில் ரம்ஜானுக்கு சுவாதி நோன்பு இருந்ததாக ஆதாரம் இல்லாத அவதூறுகளை தெரிவித்துள்ளார். இது இந்து-முஸ்லிம்களிடையே மத மோதல்களை உருவாக்கும் நோக்கத்துடன் உள்ளது.
இது போன்று குற்றங்களை தூண்டி வரும் திருமாவளவன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.