ஈரோடு:
பெண்ணின் படத்தை மார்பிங் வெளியிட்ட வாலிபரை பிடித்காது ரில் கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு அருகே உள்ள கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த சபரி கார்த்திக். சம்பவத்தன்று கார்த்திக் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். திடீரென கால்டாக்சியில் வந்த கர்நாடகா போலீசார் 3 பேர், சபரிகார்த்திக்கை சுற்றிவளைத்து காரில் ஏற்றியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியான சபரிகார்த்திக் சத்தம் போட்டதால் , அப்பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து காரை மறித்தனர். சபரியை யாரோ கடத்திச் செல்ல முயற்சிக்கிறார்கள் என நினைத்து காரை மடக்கி தகராறு செய்தனர்.
காரினுள் இருந்தவர்கள், நாங்கள் கர்நாடக போலீசார் என்றும், பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் சபரி தான் இணைந்து இருப்பதுபோல படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாக, பெண் கொடுத்த புகாரின்பேரில் சபரியை தேடி வந்தோம். ஈரோட்டில் இருப்பதை அறிந்து அவரை சுற்றிவளைத்து பிடித்தோம் என்றனர்.
போலீசார் மப்டியில் இருந்ததால் நம்ப மறுக்க அப்பகுதி மக்கள் அவர்களை காரிலேயே சிறைவைத்தபடி முற்றுகையிட்டனர். இதனால் காரில் இருந்த கர்நாடகா போலீசார் தங்கள் மேலதிகாரியை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர். இதைதொடர்ந்து கர்நாடகா போலீஸ் அதிகாரிகள் ஈரோடு மாவட்ட காவல்துறை கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் அளித்தனர்.
பெங்களுரிலிருந்து வந்த தகவலின் பேரில் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து கர்நாடகா போலீசாரை விடுவித்தார்.