சென்னை:
வக்கீல்களின் பணி சம்பந்தமாக ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை வாபஸ்பெற கோரி வரும் 25ந்தேதி 25ஆயிர்ம் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.
தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் 205 பார் கவுன்சில் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்றனர்.
சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தை வாபஸ்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எங்களின் போராட்டத்தை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் வரும் 25ம் தேதி சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த செயற்குழு கூட்டம் முடிவு செய்துள்ளது. இதில் குறைந்தது 25ஆயிரம் வக்கீல்கள் பங்குபெறுவர்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 25 ஆயிரம் வக்கீல்கள் பங்கேற்க உள்ளனர். சட்டதிருத்தத்தை வாபஸ் பெறுவது குறித்து டெல்லி சென்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டுள்ளோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் இருந்து பேச்சு வார்த்தை பற்றி தகவல் ஏதும் வரவில்லை.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக செல்ல இருக்கிறார். அவர் சுப்ரீம் கோர்ட்டில் பதவியேற்கும் நாளை கருப்பு தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் திருமலைராஜன், சிவசுப்ரமணியன் தெரிவித்தனர்.