thambidurai_360

 கரூர்:
 “தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா” என்று அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.  எம்.ஜி.ஆர். இளைஞரணி கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில்,  கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும்  அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
தம்பிதுரை பேசும்போது,  “இந்த நாட்டு மக்கள் ஏமாளி அல்ல, கருணாநிதியின் பொய்பிரச்சாரத்தை கேட்டு அதற்காக வாக்களிக்க மாட்டார்கள். மீண்டும் புரட்சித்தலைவி அம்மாதான் முதலமைச்சர்” என்றவர், “ தமிழ், தமிழ் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருப்பவர் புரட்சித்தலைவி அம்மாதான்” என்றார்.
அதாவது கருணாநிதி என்று கூறுவதற்கு பதிலாக ஜெயலலிதா என்று வாய்தவறி கூறிவிட்டார்.
இவரது பேச்சைக் கேட்டு கூடியிருந்தவர்கள்,  அதிர்ச்சி அடைந்தனர்.  பிறது சுதாரித்த தம்பிதுரை, “ இல்லை.. இல்லை… அது கருணாநிதி” என்றார்.
தவறிப்போய் பேசினாலும், தம்பித்துரை மீது மேலிடம் நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சத்தில் அவரது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.