சென்னை:
இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியது:
இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், நாடு முழுவதும் மின் விநியோகம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. முக்கிய மாநிலங்களை இணைத்து மின்சாரம் ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்துக்கு கொண்டு செல்ல மிகப்பெரிய மின்பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது
தமிழக முதல்வரை சந்திக்கும்போது தமிழக மின் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும். தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம். மேலும் மின் துறையில் புதிய தொழில் நுட்பங்கள் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து முதல்வருடன் பேசுவேன் என்றும் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.