சென்னை:
ரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அறிக்கை: தமிழகத்தில் தற்போது 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளது. மேலும் 2 மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கரூர், புதுக்கோட்டை மாவட்ட தலைநகரங்களில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கவும், அதற்கு  தேவையான கட்டிடங்கள் கட்டவும், மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கவும் தலா 229 கோடி 46 லட்சம் ரூபாய்க்கு  நிர்வாக  ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.  இதற்காக  161 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன
மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2172 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருகிறார்கள். வர இருக்கும் 2 மருத்துவக்கல்லூரியை சேர்த்தால் மொத்தம் தமிழகத்தில் 21 மருத்துவக்கல்லூரிகள் செயல்படும். இதன் காரணமாக மேலும் 300 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும்.