சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின்துறை அமைச்சர் பியூல் கோயல் இன்று மாலை முதல்வர் இல்லமான போயஸ் கார்டனில் சந்தித்து பேசுகிறார்.

தமிழக முதல்வரை சந்திக்கவே முடியவில்லை என  சட்டசபை தேர்தலில்போது  பரபரப்பான அரசியல் பேசி, தமிழக அரசியலில்  ஒருவித பரபரப்பை   கொளுத்தி போட்ட  மத்திய மின்துறை அமைச்சர் பியூல் கோயல், இன்று  சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
அதன்பிறகு மாலை 5,45 மணி அளவில் முதல்வர் ஜெயலிலிதாவை  சந்தித்து பேசுகிறார். அதாவது  ஜெ.வின் போயஸ் தோட்ட  இல்லத்தில் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த பேச்சின் போது தமிழக மின்சார பிரச்சினைகள், உதய் மின் திட்டம் போன்றவை பற்றி  விவாதிக்கப்படும் என தெரிகிறது.