திருநெல்வேலி:
இன்று காலை நடைபெற்ற அதிமுக விழா பந்தல் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பானது.
நெல்லை மாநகராட்சி சார்பில் இன்று நெல்லையை அடுத்த பேட்டை கோடீஸ்வரன் நகரில் குப்பை தொட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அதிமுக மாநில மகளிரணி செயலாளர் விஜிலா எம்.பி மற்றும் நெல்லை மேயர், யூனியன் சேர்மன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களை வரவேற்க கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர்.
எதிர்பாராவிதமாக பட்டாசு சாமியானா பந்தலின்மேல் விழுந்து தீ பிடிக்க தொடங்கியது. காற்றும் பலமாக வீசியதால் தீ மளமளவென பந்தலினுள் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளிலும் பரவியது.
கட்சி நிர்வாகிகள் உடனடியாக செயல்பட்டு அருகிலிருந்த வீடுகளில் இருந்து தண்ணீர் பிடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் 7 நாற்காலிகள் எரிந்து நாசமாயின.