ஐதராபாத்:
கோதாவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரம் உள்ள 28 கிராமங்கள் பாதிக்கப்பபட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்து உள்ளது.
வடமாநிலங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மகாராஷ்டிராவில் இருந்து ஆந்திரா வரும் கோதாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் 55 அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிகறது.
இதன் காரணமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரமாக உள்ள பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் கரையை ஒட்டிய 28 கிராமங்கள் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தீவுகள் போல் காட்சி அளிக்கிறது.
ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருவதால் ஆற்றின் இரு கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மேடான பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.