டாக்கா:
இந்தியாவை பயங்கரமான பூகம்பம் தாக்க இருப்பதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகருவதால் பூகம்பம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவை சுற்றி உள்ள இந்தியப்பெருங்கடலுக்கு அடியில் ராட்ச தட்டு உள்ளதாகவும், அது வடக்கு நோக்கி நகருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இமயமலை வளர்ந்ததாகவும், பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்துக்கு இதுவே காரணம் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது பங்களாதேஷ் பகுதியிலும், கிழக்கு இந்திய பகுதியான கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகளின் அடிப்பகுதியில் உள்ள டெக்கானிக் எனப்படும் தட்டுகள் நகர்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக ஆராய்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக இந்தியா, பங்களாதேஷ், மியான்மர் போன்ற நாடுகளின் பல பகுதிகளில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இது ரிக்டரில் 8.2 முதல் 9 க்கும் அதிகமான அளவுக்கு பதிவாகும் என்றும், மிகப்பெரிய அழிவை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel