டில்லி:
ங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை, நாளை மறுநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும்.

நாளை மறுநாள் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை தவிர்த்து பிற தேசியமையமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் 10 தனியார் வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 3 லட்சம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள். அன்று தினம் நாடு முழுவதும் 80,000 வங்கிகள் மூடப்படும். தமிழகத்தில் 6,000 வங்கிகள் மூடப்படும்.
ஆகவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது முக்கிய பரிவர்த்தனைகளை இன்றே முடித்துக்கொள்வது நல்லது.