சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இப்ராகீம் கலிபுல்லா உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள மூவர் வரும் 22ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்கள்.

இதையடுத்து புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு அவசர கூட்டம் நடத்தியது. இக் கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டனர். விரைவில், இவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பார்கள்.
Patrikai.com official YouTube Channel