போலிசாரைக் கண்டித்து நடைப்பெற்ற பேரணி ஒன்றில் போலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஐந்து போலிசார் மரணமடைந்துள்ளனர்.
கடந்த சிலநாட்களுக்குள், அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு வேறு சம்பவங்களில் கருப்பின இளைஞர்கள் இருவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
dallas 01
புதன் கிழமை , மினசொட்டா -செயின்ட் பாலில் , ஃபிலாண்டோ கஸ்டில் எனும் கறுப்பின நபரை ஒரு போக்குவரத்து சிக்னலில் வைத்து ஒரு போலிஸ் கொலை செய்தார்.  நேற்று அல்டன் ஸ்டெர்லிங்க் எனும் கறுப்பினத்தவர் லூசியாணா- படன் ரூஜ் எனும் நகரில் ஒரு போலிசாரால் கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்து சர்ச்சையானது.
இதனையடுத்து இனவெறிப் பிடித்த வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளை கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
DALLAS MARCH 1
டெக்ஸாஸ் மாகாணத்தில் டல்லாஸில் உள்ள டவுன்டவுனில் ‘கருப்பு இன மக்களின் உயிரும் கருத்தில் கொள்ளத்தக்கது’ என்ற பெயரில் பேரணி நடத்தினர்.
அமைதியான முறையில் நடந்துக் கொண்டிருந்த இந்தப் பேரணியில் , சில அடையாளம் தெரியாத நபர்கள் திடீரெனப் போலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
dallas 02
இதுவரை 11 காவலதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சுடப்பட்டுள்ளனர்.
அதில் ஐந்து காவலர்கள்  மரணமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை சந்தேகத்தின் பெயரில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகதிற்குரிய ஒருநபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தாக்குதலில் ஈடுப்பட்ட கலவரக்காரர்கள் உடலில் குண்டு துளைக்காத பாதுகாப்புப் கவசம் அணிந்துக் கொண்டு போலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போலிசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஒரு சந்தேகதிற்குரிய நபரில் புகைப்படத்தை போலிசார் வெளியிட்டு இருந்தனர். மார்க் ஹுகெஸ் எனும் புகைப்படைத்தில் உள்ள நபர் போலிசில் சரணடைந்தார்.
அவர் தாக்குதலில் ஈடுபடவில்லை என ஊர்ஜிதமானவுடன் அவரை போலிசார் விடுதலை செய்தனர்.
இதனையடுத்து அந்நகரில் மீது விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கறுப்பினத்தவர் மீதான தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஊடுருவிய சிலர் போலிசாரைக் கொன்று பழிதீர்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
dallas 1
dallas 3
கடந்த சில ஆண்டுகளில் பணியின் போது கொல்லப்பட்ட அமெரிக்க  போலிசார் எண்ணிக்கையை விட போலிசாரால் கொல்லப்பட்ட  கறுப்பின மக்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
dalas 4
போலிசார் மீதான துப்பாக்கிச் சூட்டினை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா  கறுப்பின மக்களின் துயர்தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.