ரமலான் பிறை தென்பவடுவது குறித்து அப்துல் வகாப் (Abdul Vahab ) அவர்களின் சுவையான முகநூல் பதிவு:
“29 வது நோன்பு முடிந்தாலே நம்ம ஆளு வானத்த தா பார்த்துட்டு இருப்பான். வளைகுடா போன்ற மத்த நாடுகளில் ஓரளவு கணித்து சரியா சொல்வாங்க ஆனா தமிழ்நாட்டில் எனக்கு விபரம் தெரிந்து தலைமை காஜின்னு மிச்சர் தின்னுட்டு இருக்குறவர் இதுவர உருப்படியா சொன்னதா சரித்திரமே இல்ல.
பதினைந்து வருடங்கள் முன்னால இரவு நேர தராவிஹ் தொழுகை முடிந்து படுத்தாச்சு 11 மணிக்கு போன் அழைப்பு அப்பாவுக்கு முதலியார்பட்டில பிறை பார்த்தாச்சு நாளைக்கு பெருநாள் அறிவிக்கனும் பள்ளிக்கு வாங்கன்னு.
ஏன்பா அந்த ஊர்ல எவன்யா பார்த்தான் இந்த நடு ராத்திரில? மாவட்ட அளவுல தகவல் போச்சா சென்னைல இருந்து சொல்லியாச்சான்னு எல்லா ஊருக்கு போன் போட்டு தகவல் கேட்டால் எல்லாருக்கும் 9 மணிக்கு தெரிந்து இருக்கு.
எங்க ஊர்ல இருந்து பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற முதலியார் பட்டிகாரன் எங்களுக்கு சொல்லாம தமிழ்நாடு பூறா சொல்லி வச்சி இருக்கான்னு குழப்பம். அப்ப செல்போன் எல்லா இல்லாத நேரம் பெரிய நகரங்களுக்கு தகவல் போய் கிராமங்களுக்கு வரக்குள்ள நடு ராத்திரி ஆயிடும்.
சரின்னு எங்க பள்ளியின் மத குரு பக்கத்துல இருக்கிற தெருல உள்ளவங்களுக்கு எல்லா சொல்லனும் தகவல் தெரியாம தூங்கி இருப்பாங்க சொல்லிட்டு வாங்கன்னு சொன்னார் சரின்னு நண்பர்கள் எல்லா போய் ஒவ்வொரு வீடா கதவ தட்டி சொன்னோம் அதுல ஒரு அம்மா தலய விரிச்சி போட்டு பாதி தூக்கம் ல வந்து நிக்கு. நாளைக்கு பெருநாள் அஜரத் சொல்ல சொன்னார் சொன்னோம்.
அவளோதான் உங்களுக்கு வேல இல்ல அஜ்ரத்க்கு வேல இல்ல கறி வாங்கல இட்லிக்கு மாவு அரைக்கல உங்க சவுரியத்துக்கு பெருநாள் வைப்பிய போங்க நாள மறுநாள் வைக்க சொல்லுங்க இல்லனா பெருநாள் நாங்க கொண்டாடலன்னு பட்டார்ன்னு கதவ சாத்திட்டு.
ஒரு இட்லிக்கு பெருநாள் கேன்சல் பண்றதா எங்க அப்பா கிட்ட வந்து சொன்னேன் அவ்ங்களுக்கு அவ்ளோதாண்டா அறிவு சொல்லிட்டு வீட்டுக்கு போனோம் எங்க அம்மா என்னாச்சி கேட்டாங்க எங்க அப்பா நாளைக்கு பெருநாள் அறிவிச்சிட்டு வரோம்ன்னு சொன்னார்.
அவ்ளோதான்.. ” உங்களுக்கு உங்க ஜமாத் ஆளுங்களுக்கு வேற வேல இல்ல உங்க இஸ்டத்துக்கு வச்சிட்டு வந்துடுவிங்க இங்க இட்லி மாவு ,மசாலா ஒன்னு அரைக்கல எல்லா வேல நாங்க இழுத்து போட்டு செய்யனும் நீங்க செண்ட் அடிச்சிட்டு தொழ போய்டுவிங்க கொஞ்சமாச்சும் கூறு இருக்காங்க உங்களுக்கு”ன்னு சத்தம் போட்டாங்க.
வானத்துல பிற தெரிஞ்சா நா என்னடி பண்ணுவேன் புலம்பிட்டு என்ன பார்த்தார் எல்லா பெண்கள் டிசைன் அப்படிதான் மகனேன்னு…..
எங்க அம்மா ராத்திரி ரெண்டு மணிக்கு எல்லாரயும் எழுப்பி, நீ போய் கறி வாங்கு, நீ மசாலா அரைச்சி வை, நீ மாவு ரெடி பண்ணுன்னு டிபார்மெண்ட் எல்லா ஒதுக்கி கொடுத்து விடிய விடிய வேல நடக்கும்.
உலகம் விஞ்ஞானம் அசுற வளர்ச்சிலயும் இந்த பிறை பிரச்சனை இன்னும் தீர்ந்த பாடில்லை.இந்த பிரச்சனை தீர்ந்தாலும் இட்லி மாவு பிரச்னை எப்ப தீரும் தெரில.”